உப்பு தீபம் யாரெல்லாம் ஏற்றலாம் தெரியுமா? இப்படி ஏற்றினால் ஆபத்து வருமா? உப்பு தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

salt-diya-lakshmi

பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றப்படும் இந்த உப்பு தீபம் ஆனது நிறைய நன்மைகளை நமக்கு தரக்கூடியது ஆகும். பலருக்கு உப்பு தீபம் ஏற்றுவதில் நிறைய சந்தேகங்களும் இருக்கும். உப்பு தீபத்தை யாரெல்லாம் ஏற்றலாம்? யாரெல்லாம் ஏற்றக்கூடாது? உப்பு தீபம் எப்பொழுது ஏற்ற வேண்டும்? எப்படி ஏற்ற வேண்டும்? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? இது போன்ற பல்வேறு கேள்விகள் எழும். அவற்றிற்கெல்லாம் விடையை காணவிருக்கிறோம். உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபத்தை எதற்காக ஏற்றுகிறோம்? என்பதையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

உப்பு தீபம் ஏற்ற உகந்த நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி தினம் மட்டுமே! மற்ற தினங்களில் உப்பு தீபம் ஏற்றுவது தவிர்ப்பது உத்தமம். உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால், சகல ரோகங்களும் அதாவது நோய்களும் தீரும் என்பது ஐதீகம். கோவில்களில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கோபுரத்தில் வைப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு வைக்க நோய்கள் தீரும் என்பது சாஸ்திர நம்பிக்கை. தீராத பிணியில் அவதிபடுபவர்கள் வீட்டில் உப்பு தீபத்தை ஏற்றி வழிபடலாம்.

பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால் தொழில் தடை, வருமான தடை, பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும். நினைத்த வேலை நினைத்தபடியே கிடைக்கும். மனதில் நினைத்த விஷயம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் பொழுது உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் 48 நாட்களுக்குள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.

உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பகைவர்கள் தொல்லை நீங்க, வெள்ளிக்கிழமை தோறும் உப்பு தீபம் ஏற்றலாம். எவ்வளவு குடைச்சலை உங்களுக்கு பகைவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை செயல்படாமல் செய்துவிடும் இந்த உப்பு தீப வழிபாடு. அதற்காக மனதில் வஞ்சம் வைத்துக் கொண்டு எந்த ஒரு பரிகாரத்தையும் செய்யக்கூடாது. வஞ்சம் இல்லாத, துன்பம் நீங்க கூடிய வகையில் உங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

salt-diya1

பணப் பிரச்சினையில் கஷ்டப்படுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் விருத்தி உண்டாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர, பதவி உயர்வு கிடைக்க, மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெற, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற, பிள்ளை வரம் வேண்டுபவர்கள், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. மற்றவர்களை அழிக்கும் நோக்கத்துடனும், சுயநல எண்ணத்துடனும் உப்பு தீப வழிபாடு செய்தால் எதிர்வினையையும் சந்திப்பீர்கள்.