- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசமையலறை கல் உப்பு பரிகாரம்

சமையலறை கல் உப்பு பரிகாரம்

- Advertisement -

வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு கடன் இருக்கக் கூடாது. இரண்டு நாள் சாப்பிடாமல் கூட உயிர் வாழ்ந்து விடலாம். ஆனால் இந்த கடன் தொல்லையில் வாழ்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது. ஒரு நிமிடம் கூட இவர்களுக்கு அந்த நிம்மதியை அந்த கடவுள் கொடுப்பதில்லை. சில பேருக்கு உயிரை மாய்த்துக் கொள்ளக்கூட தைரியம் வந்து விடுகிறது.

கடன் பிரச்சனையை எதிர்த்துப் போராட தைரியம் வரவில்லை. உங்களுடைய குடும்பமும் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறதா. இருக்கும் கடனை மிக விரைவில் அடைத்து விட்டு, நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பொதுவாகவே கல் உப்பை வைத்து நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரங்களுக்கு பல மடங்கு சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு கல் உப்பு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சமையலறை கல் உப்பு பரிகாரம்

உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த மூலையில் கொஞ்சமாக கல்லுப்பை போட்டு வையுங்கள். வீட்டில் இருக்கும் கடன் எப்படி குறைகிறது என்று மட்டும் பிறகு பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்களுக்கு நல்லது நடக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் உங்கள் சமையலறை எப்போதும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அதாவது எப்போதுமே சிங்கிள் எச்சில் பாத்திரம் போட்டு வைத்திருக்கக் கூடாது. குப்பைகளை சமையலறை இல்லையே குவித்து வைக்கக் கூடாது. முதலில் சிங்கை சுத்தமாக வைத்திருந்தாலே பாதி கடன் சுமை நம்மை விட்டு நீங்கும். இது முதல் பரிகாரம்.

அடுத்தபடியாக உங்கள் சமையலறையில் ஈசானிய மூலை (வடகிழக்கு மூலை) எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஈசானிய மூலையில் ஒரு அகலமான பவுலில் நிரம்பக் கல்லுப்பு போட்டு வைக்க வேண்டும். அந்த கல்லுப்புக்கு மேலே 3 மிளகு, 3 ஏலக்காய், 3 கிராம்பு வைத்து விடுங்கள். தினமும் குடும்பத் தலைவி சமைப்பதற்கு முன்பு இந்த கல்லுப்பைத் தொட்டு, எங்கள் குடும்பத்திற்கு இருக்கும் கடன் இந்த கல்லுப்பு தண்ணீரில் கரைவது போல, கரைந்து போக வேண்டும் என்று மனதார வேண்டி குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, பிறகு சமைக்க துவங்க வேண்டும்.

- Advertisement -

ஒரு வாரத்திற்கு அந்த கல் உப்பு அப்படியே சமையலறையில் ஈசானிய மூலையில் இருக்கட்டும். இந்த ஒரு வாரமும் கல்லுப்பைத் தொட்டு நீங்கள் பிரார்த்தனை வைக்க வேண்டும். தினமும் காலையில் சமைப்பதற்கு முன்பு இந்த வேண்டுதலை முடித்துவிட்டு சமைக்கவும்.

ஒரு வாரம் கழித்து அந்த கல் உப்பை எடுத்து குடும்ப தலைவி கையாளியே தண்ணீரில் கரைத்து விடலாம். அந்த கல்லுப்புக்கு மேலே இருக்கும் மிளகு கிராம்பு ஏலக்காயையும் மாற்றி விட வேண்டும். தொடர்ந்து இதுபோல செய்து வர, படிப்படியாக உங்கள் கடன் சுமை குறைவதை பார்ப்பீர்கள். எப்படி தெரியுமா? வருமானத்திற்கு தேவையான வழியை கடவுள் காண்பித்துக் கொடுப்பான். எங்களுக்கு 10 லட்சம் கடன் இருக்கிறது, 20 லட்சம் கடன் இருக்கிறது என்றால் அந்த பணத்தை சம்பாதிப்பதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.

என்ன செய்தால் நிறைய பணம் வரும் யாரை பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம் என்ற குழப்பத்திற்கு உண்டான தீர்வு கிடைக்கும். அதிலிருந்து நீங்கள் ஏதாவது ஒரு வழியைப் பிடித்துக் கொண்டு, என் குடும்பத்தை முன்னேற்றி விடுவேன் என்று தன்னம்பிக்கையோடு நீங்கள் செயல்பட துவங்குவீர்கள். கடனால் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த எளிமையான செலவில்லா பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வறுமை நீங்கி செல்வ செழிப்பை பெற பரிகாரம்

இந்த பரிகாரத்தை எந்த நாளில் எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் துவங்கலாம். பரிகாரத்தை துவங்கும் நேரத்தில் ராகு காலம் எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு தான். இன்று செவ்வாய்க்கிழமை. முருகனை வேண்டி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்