ஆப்ப சோடா ஆரோக்கியத்திற்கு வேண்டுமென்றால் நன்மை செய்யாமல் இருக்கலாம்! அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் இப்படி மட்டும் செய்தால்!

baking-soda-face-wash
- Advertisement -

ஆப்ப சோடா எனப்படும் சமையல் சோடா ஸ்நாக்ஸ் வகைகள் செய்வதற்கும், இட்லி மாவிலும் பெரும்பாலும் கலக்கப்படுகின்றது. இது உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பதில்லை எனவே இதை மிகக் குறைந்த அளவு சேர்த்து பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும் இதை சமையலில் முற்றிலும் தவிர்த்து விடுவது தான் நல்லது. இந்த ஆப்ப சோடா அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த ஒரு ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? வாருங்கள் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

பேக்கிங் சோடா என்பதும் இந்த ஆப்ப சோடா என்பதும் ஒன்றா? என்று பலருக்கும் குழப்பம் இருக்கலாம். சமையல் சோடா, ஆப்ப சோடா, பேக்கிங் சோடா என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த சோடா உப்பு ஒரே பொருளை தான் குறிக்கின்றது. கேக் செய்வதில் பயன்படுத்தப்படும் இந்த பேக்கிங் சோடா உலர் புளிப்பேற்றி என்று கூறலாம். இது கார்பனேட் அல்லது பை கார்பனேட் அமிலம் ஆகும். இட்லி மாவுடன் சமையல் சோடாவை சேர்க்கும் பொழுது கார-அமில வினை புரிந்து கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. இதனால் சீக்கிரம் மாவு புளித்து விடுகிறது.

- Advertisement -

ஈஸ்ட், கேக் போன்றவற்றை செய்யும் பொழுது பயன்படுத்தும் இந்த பேக்கிங் சோடா நொதித்தல் வினைபுரிந்து மிருது தன்மையை கொண்டு வருகிறது. வீட்டு குறிப்புகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த சமையல் சோடா ஒரு விதமான துர்வாடை அல்லது விரும்பத்தகாத நெடியை முற்றிலுமாக நீக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. நீங்கள் சமையல் கட்டில், பாத்திரம் கழுவி முடித்த பின்பு கொஞ்சம் பேக்கிங் சோடாவை போட்டு தேய்த்து விட்டால் சிங்கில் இருந்து வரும் துர் வாடை நீங்கும். இப்படி பல விஷயங்களுக்காக பயன்படுத்தும் இந்த பேக்கிங் சோடா அழகு குறிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

காலையில் எழுந்தவுடன் கொஞ்சம் பேக்கிங் சோடாவை கையில் எடுத்து ரெண்டு சொட்டு தண்ணீர் விட்டு முகம் முழுவதும் அழுத்தம் கொடுக்காமல் லேசாக வேகமாக ஸ்கரப் செய்யுங்கள். முகத்தில் பேக்கிங் சோடாவை கொண்டு ஸ்கிரப் செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறிவிடும். இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறுவதால் முகம் பளிச்சன மாறும். வெண், கரும்புள்ளிகள் வெளியில் வரும். அதன் பிறகு நீங்கள் அப்படியே விட்டு விடக்கூடாது. முகம் ரொம்ப சென்சிடிவ் ஆனது எனவே ஸ்கிரப் செய்தவுடன் முகத்திற்கு ஏதாவது ஒரு இயற்கையான பேக் ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஸ்க்ரப் செய்வதற்கு அரிசி மாவு, சர்க்கரை, டீ தூள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் அதை விட பேக்கிங் சோடா பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் இறந்த செல்களை பாதுகாப்பாக வெளியேற்றும். அதன் பின்பு நீங்கள் முகத்திற்கு காய்கறி சாறு அல்லது பழச்சாறு ஏதாவது ஒன்றை பேக் போல போட்டுக் கொள்ளலாம் அல்லது கடலை மாவு, முல்தானி மெட்டி போன்றவற்றையும் போட்டுக் கொள்ளலாம்.

இதனால் முகத்தில் புதிய செல்கள் முளைத்து முகத்தை இறுக்கமாக்கி மாசுமரு இல்லாமல் பருக்கள் தோன்றாமல் எப்போதும் இளமையாகவே வைத்துக் கொள்ளும். பல ஆயிரம் செலவு செய்து பார்லருக்கு சென்று பேஷியல் செய்து கொள்பவர்கள், இதை ஒரு முறை செஞ்சு பாருங்க, இனி பேசியல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. பப்பாளி பழம், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு சாறு, வாழைப்பழ கூழ், எலுமிச்சை சாறு, பயத்த மாவு போன்றவற்றை கொண்டு முகத்திற்கு பேக் போட்டால் நல்ல எபக்ட்டிவ்வான பலனை கொடுக்கும்.

- Advertisement -