சமைத்து முடித்த பின்பு, கட்டாயம் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். சமையலறைக்கும், சாப்பாட்டிற்கும் ஒருபோதும் கஷ்டம் வராது. நீங்கள் சமைத்த உணவு ஒருபோதும் வீணாகாது.

cooking
- Advertisement -

நம் வீட்டு சமையல் அறையில் நாம் சமைத்த உணவு வீணாவதற்கு முதல் காரணம் கண் திருஷ்டி தான். சில சமயங்களில் நாம் பார்த்து பார்த்து ருசியாக சமைக்கும் சாப்பாட்டை நம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். சாப்பாட்டை சாப்பிட முடியாத அளவிற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அப்படி இல்லை என்றால் திடீரென்று வீட்டில் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு வந்து வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடாமலேயே விட்டிருப்பார்கள். நாம் சமைத்த சாப்பாடு அத்தனையும் அப்படியே வீணாகி இருக்கும்.

cooking'

அப்படி இல்லை என்றால் அந்த வீட்டில் தினம்தோறும் சமைக்கும் பெண்மணிக்கு சமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் சரி இவை அனைத்திற்கும் ஒரே காரணம் அந்த சமையலறையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் தான். இதை அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி என்றும் சொல்லலாம்.

- Advertisement -

ஒரு வீட்டில் ஆசை ஆசையாக ஒரு பெண் பார்த்து பார்த்து சமைத்த சாப்பாட்டினை, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடாமல் விட்டு விட்டால் அதில் எவ்வளவு பெரிய கஷ்டம் இருக்கும் என்பது, நிச்சயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரிந்திருக்கும்.

clay-pot-cooking2

சிலபேர் சமைக்க ஆரம்பிக்க தொடங்கும்போதே அப்படியே சமையலறையில் இருந்து கமகமவென வாசம் வீசும். நாமே சில சமயம் இதை உணர்ந்து இருப்போம். பக்கத்து வீட்டில் ஏதோ சமைக்கிறார்கள். நன்றாக வாசம் வருகிறது, என்று தினமும் நம்முடைய வீட்டில் இருந்தபடியே பக்கத்து வீட்டு சமையல் அறையை வாசம் பிடிப்போம். அப்போது நம்மை அறியாமலேயே அந்த வாசம் வரக்கூடிய சாப்பாட்டை சாப்பிடவேண்டும் என்ற ஏக்கம் தோன்றும். அந்த எண்ணம் கண் திருஷ்டியாக மாறிவிடும்.

- Advertisement -

நான் சமைக்கும் சாப்பாட்டை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்க்க போவதில்லை. அதை ருசிக்க போவதும் இல்லை. இருப்பினும் அவர்களுடைய எண்ணம் நமக்கு ஒரு எதிர்மறை ஆற்றலாக திரும்புகிறது. அவ்வளவு தான். இதற்காக பக்கத்து வீட்டுக்காரரை குறை சொல்லவில்லை. சரி, இந்த பிரச்சனைக்கு ஏதாவது ஒரு தீர்வு உள்ளதா. நாம் சமைக்கும் சாப்பாடு வீணாகாமல் இருக்க என்ன செய்வது. இதற்கான பரிகாரத்தை நம்முடைய முன்னோர்கள் அப்பவே நமக்கு சொல்லி விட்டுதான் சென்றுள்ளார்கள்.

கடுகை நாம் சமையலில் சேர்ப்பதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஆன்மீக ரீதியாக கடுகு தாளிப்பு என்பது நம்முடைய சமையலில் இருக்கக்கூடிய கண் திருஷ்டியை நீக்குவதற்காக, நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடித்தது என்றும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

clay-pot-cooking

அதாவது நாம் நம்முடைய சமையலறையில் சமையலை முடித்துவிட்டு, அதாவது குழம்பு செய்து விட்டு அந்த குழம்புக்கு இறுதியாக கடுகு தாளிப்பு கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் நம்முடைய சமையலறையில் சமைத்த பொருட்களுக்கு திருஷ்டி கழிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டில் இனி நீங்கள் மணக்க மணக்க சைவம் சமைத்தாலும் சரி, அசைவம் சமைத்தாலும் சரி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில், அரை ஸ்பூன் கடுகை தாளித்து நீங்கள் சமயத்த எல்லா பொருட்களிலும் சிறிதளவு போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.

cooking-vilakku

உங்களுடைய வீட்டில் நீங்கள் சமைத்த சாப்பாடு ருசியாகவும் இருக்கும். அதே சமயம் அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியால் உங்களுடைய சாப்பாடு வீணாகாமல் இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாட்டை திருப்தியாக சாப்பிடவும் செய்வார்கள். பொதுவாகவே கடுகை சுற்றி போட்டால் எதிர்மறை ஆற்றல் நீங்கும் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதே தான் இந்த சாப்பாட்டிற்கும். இந்த பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும், உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்த்து பலனைப் பெறலாம் என்ற இந்தக் கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -