தினமும் இரவு சமையலறையில் பெண்கள் இந்த ஒரு வேலையை தவறாமல் செய்தால், காலையில் எழுந்ததும் பெண்களின் மனது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

cook-anna-poorani
- Advertisement -

காலையில் எழுந்ததும் பெண்கள் குளியலறைக்கு கழிவறைக்கு சென்ற பிறகு, செல்லக்கூடிய இடம் எது சமையலறை. அந்த சமையல் அறையை பார்த்தவுடன் பெண்களின் மனது மகிழ்ச்சி அடைந்தால், அந்த நாள் முழுவதும் பெண்களுக்கு மூட் அவுட் ஆகாது. சுறுசுறுப்பாக அடுத்தடுத்து வேலையை செய்யலாம். பெண்களின் மனநிலையை சீர் செய்யக்கூடிய, ஆன்மீக ரீதியாக ஒரு குறிப்பு தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

குறிப்பை படித்து விட்டு இது சரி என்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள். ஒருநாள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். மறுநாள் உங்களுடைய மனநிலை காலையில் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். பிறகு யார் தடுத்தாலும் சமையலறையில் இந்த வேலையை செய்துவிட்டு தான் நீங்கள் தூங்கச் செல்வீர்கள்.

- Advertisement -

வழக்கம்போல தான் முதலில் பெண்கள் இரவு சமையல் அறையில் பாத்திரங்களை தேய்த்து விட்டு, சிங்கை சுத்தம் செய்துவிட்டு அடுப்பை துடைத்து விட வேண்டும். இதுதான் முதல் விஷயம். எத்தனை முறை சொன்னாலும் இதில் மாற்றம் கிடையாது. இந்த ஒரு வேலையை இரவு நேரத்தில் செய்யக்கூடிய பெண்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அந்த வீட்டிற்கு பெரிய அளவில் பணகஷ்டமும் மனக்கஷ்டமும் வராது. நிச்சயமாக அந்த வீட்டில் மன நிம்மதியான வாழ்க்கை இருக்கும். அளவான வருமானம் இருந்தாலும், அளவில்லாத மகிழ்ச்சியை அவர்களுடைய குடும்பம் பெறும் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் கிடையாது.

எச்சை பாத்திரங்களை கழுவி விட்டு, அடுத்தபடியாக அடுப்பை துடைத்து விட்டீர்கள் அல்லவா. சமையல் மேடையில் இரவு அரிசி மாவில் அல்லது கோலமாவிலோ அல்லது சாக்பீஸிலாவது ‘அக்ஷயம்’ என்ற வார்த்தையை எழுதி விட்டு, செல்லுங்கள். நீங்கள் எழுதக்கூடிய இந்த ஒரு வார்த்தை உங்களுடைய சமையல் அறையில் தானியத்திற்கு குறைவை கொடுக்காது. அதாவது சாப்பாட்டிற்கு உங்களுடைய வீட்டில் பஞ்சம் என்ற ஒரு நிலைமை வரவே வராது. அந்த அன்னலட்சுமி அக்ஷயம் என்ற வார்த்தையில் நிறைவாக இருந்து உங்கள் பரம்பரைக்கே உணவை வழங்கிக் கொண்டு இருப்பாள்.

- Advertisement -

அக்ஷய பாத்திரம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா. அல்ல குறையாத அக்ஷய பாத்திரம் போல உங்களுடைய சமையல் அறையும் இருக்கும். அதே போல நீங்கள் செய்த சாதம் வீணாகாது. சமையல் ருசிக்கும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியமும் மேம்படும். இத்தனை விஷயங்களும் யாரிடத்தில் உள்ளது. பெண்களின் கையில் தான் உள்ளது. உங்கள் வீட்டு சமையல் அறையை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதில் தான் அடங்கி இருக்கிறது விஷயமே. (மறுநாள் சமையல் மேடையை துடைக்கும் போது இந்த வார்த்தையையும் துடைத்து விட வேண்டும். மீண்டும் புதியதாக எழுதி வைக்க வேண்டும்.)

மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். குடும்பத்தில் நிச்சயமாக சந்தோஷம் பிறக்கும். காலையில் எழுந்து இப்படிப்பட்ட சமையல் அறைக்குள் பெண்களாகிய நீங்கள் நுழையும் போது, ஒரு கோவிலுக்குள் நுழைவது போல, பூஜையறையில் நுழைவது போல ஒரு மன திருப்தி ஏற்படும். பிறகு வேலை சுறுசுறுப்பாக அது பாட்டுக்கு தானாக நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்று கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -