பெண்கள் சமையலறையில் சாதாரணமாக செய்யக்கூடிய இந்த ஒரு சின்ன தவறு, நம்முடைய குடும்பத்திற்கு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கூட பிரச்சினையை கொடுத்து விடும்.

cook-anna-poorani
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக நேரம் செலவிடக்கூடிய இடம் என்றால் அது சமையலறை. வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லாத பெண்களாக இருந்தாலும் சரி, சராசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை சமையலறையில் கழித்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் சமைப்பது என்பது பெண்களுக்கு உரிய விஷயமாக இருக்கின்றது. நிறைய வீடுகளில், நிறைய இடங்களில் ஆண்களும் சமைக்கிறார்கள். இருப்பினும் இது பெண்களுக்கு உரிய கடமையாக தான் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அடுத்தவர்களின் பசியை ஆற்றக்கூடிய, மிக மிக முக்கியமான இந்த சமையல் வேலையை செய்யும்போது, பெண்கள் எந்த தவறை செய்யக்கூடாது என்பதை பற்றியும், இந்த தவறை செய்வதினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றியும் சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பெண்கள் சமைக்கும்போது மன கசப்போடு மன கஷ்டத்தோடு, இன்னைக்கு ஏன் தான் சமைக்கின்றோமோ என்ற சோம்பேறித்தனத்தோடு வெறுப்போடு சமைக்கவே கூடாது. சமைக்கும்போது சமயலை ஒரு கஷ்டமாகவே பார்ப்பார்கள். வடித்து வடித்து கொட்டுவது தான் என் வேலையா. நான் என்ன மெஷினா என்றெல்லாம் சில பேர் புலம்பிக்கொண்டே சமைப்பது உண்டு.

- Advertisement -

நீங்க சமைத்து உங்களுடைய பிள்ளைகளுக்கு அந்த சாப்பாட்டை கொடுக்கப் போகிறீர்கள். அந்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் உங்களுடைய பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரப் போகின்றன. உங்கள் பிள்ளைகளின் உடம்பில் ஓடக்கூடிய ரத்தம், நீங்கள் சமைத்து போட்ட இந்த சாப்பாட்டில் இருந்து உருவாகப் போவது தான். அவர்களுடைய உடம்பின் ஆரோக்கியம் மேம்படுவது, அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லக்கூடியதே நீங்கள் போடும் அந்த ஒரு கைப்பிடி சாதம் தான்.

நீங்கள் போடக்கூடிய ஒவ்வொரு சாத பருக்கையிலும் எதிர்மறை எண்ணமும், எதிர்மறை ஆற்றலும் நிறைந்து இருந்தால், அது உங்களுடைய குழந்தைக்கு ஒரு போதும் ஆரோக்கியத்தை கொடுக்காது. அது மட்டும் இல்லாமல் எதிர்மறை எண்ணங்களோடு நீங்கள் சமைக்கின்ற சாப்பாட்டை உங்கள் குழந்தைகளுக்கு அல்லது உங்களுடைய கணவருக்கோ போடும்போது அந்த உணவை அவர்கள் சாப்பிடும் போது அவர்களுடைய ரத்தத்திலும் எதிர்மறையான எண்ணங்கள் தான் உருவாகும்.

- Advertisement -

உங்களுடைய பிள்ளைகளின் உடம்பில் ரத்த அணுக்களும், விந்து அணுக்களும் உருவாவது நீங்கள் போடக்கூடிய சாப்பாட்டில் இருந்து தானே. மனநிறைவு இல்லாமல் திருப்தி இல்லாமல், கடமைக்காக சமைத்து போடக்கூடிய சாப்பாட்டில் இருந்து உருவாகக் கூடிய விந்துவில் இருந்து உருவாகக்கூடிய அடுத்த சந்ததியினர்கள் எப்படி நன்றாக வாழ முடியும். சற்று சிந்தித்துப் பாருங்கள். பிறக்கக்கூடிய பிள்ளைகள் நோய் நொடியோடு ஆரோக்கியம் அற்ற பிறப்பதற்கு காரணம் நீங்கள் போடும் சாப்பாட்டில் இருந்தே தொடங்கி விடுகிறது.

நீங்கள் போடுவது வெறும் சாப்பாடு மட்டும் அல்ல. உங்களுடைய அடுத்த சந்ததியினரை உருவாக்கக்கூடிய விதையை தான் சாப்பாடாக உங்கள் குழந்தைகளுக்கு போடுகிறீர்கள். நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்முடைய அடுத்த தலைமுறைகள் ஆரோக்கியம் இல்லாமல் நோய் நொடியோடு பிறப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லலாம்.

ஆகவே சமைக்கும் போது மனதில் சந்தோஷத்தோடு சமைக்க வேண்டும். இந்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் என் கணவரும், என் குழந்தைகளும் ஆரோக்கியத்தோடு இந்த பூமியில் வாழப் போகிறார்கள். அதற்கு எப்படி சமைக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை பெண்கள் தான் கொண்டு வர வேண்டும். சில வீடுகளில் சமைக்கக்கூடிய பெண்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காது. ‘நீ சமையல் தானே செய்கிறாய்’ என்று வீட்டில் இருக்கும் மற்றவர்கள் தாழ்த்தி குறைவாக பேசுவார்கள். அது ரொம்பவும் தவறு. வீட்டில் இருக்கக்கூடிய பெண் ஆரோக்கியமாக சமைப்பதன் மூலமாகத்தான் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அதை சாப்பிட்டு விட்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மனநிறைவோடு சந்தோஷத்தோடு சமைத்து அதை வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -