தீய சக்திகள் வீட்டை நெருங்காமல் இருக்க வளர்க்க வேண்டிய செடி

amman1
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு முன்பு செடி கொடிகளை வைத்து பராமரித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றினாலே போதும், நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம். ஏனென்றால் பச்சை பசேலனை இருக்கும் செடி கொடிகள் நம் வீட்டை சுற்றி இருப்பது அவ்வளவு நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

இப்படி நம் வீட்டிற்கு முன்பாக வளர்க்கக்கூடிய சில செடிகள் நமக்கு பாதுகாப்பு கவசம் ஆகவும் செயல்படும். அந்த வகையில் நம் வீட்டை கெட்ட சக்திகள் அண்டாமல் இருக்க, நிலை வாசலில் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான செடியை பற்றிய தகவலை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கெட்ட சக்தி வீட்டை நெருங்காமல் இருக்க வளர்க்க வேண்டிய செடி

கொடி கள்ளி, குச்சி கள்ளி என்று சொல்லப்படும் மூலிகைச் செடியை நிலை வாசலில் நட்டு வளர்த்தால், அந்த வீட்டிற்குள் எந்த தீய சக்தியாலும் நுழைய முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு இந்த செடியை பற்றி தெரிந்திருக்கும். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு இந்த செடியை பற்றி தெரிந்திருக்காது.

இதில் இலைகளே இருக்காது. பச்சை நிறத்தில் குச்சி குச்சாக வளரக்கூடிய தன்மையை கொண்ட செடி வகை இது. இதை உடைத்தாலே இதிலிருந்து பால் வரத் தொடங்கும். அந்த பாலில் விஷம் இல்லை என்றாலும், கண்களில் வாயில் எல்லாம் அந்த பால் படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அந்த காலத்தில் வைத்தியர் வீட்டில் கட்டாயம் இந்த செடி இருக்கும். இந்த செடியை அவர்கள் மருத்துவத்திற்க்கு பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த செடி மிக மிக உயரமாக வளரக்கூடிய தன்மையை கொண்டது. சிறியதாக ஒரு செடியை கொண்டு வந்து நட்டு வைத்து விட்டீர்கள். அது மிகவும் உயரமாக வளர்ந்து நிற்கிறது என்றால், நிறைய இட வசதி இல்லாதவர்கள் அந்த செடியை வெட்டி விடலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த செடியை வைத்து, இந்த செடியில் வளரக்கூடிய குச்சிகளை வைத்து வேறு என்ன பரிகாரங்கள் எல்லாம் செய்யலாம் என்பதை பற்றிய தகவலையும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சில குழந்தைகளுக்கு உடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் எதுவுமே இருக்காது. ஆனால் எப்போதும் அழுது கொண்டே இருக்கும். நன்றாக பசித்து சாப்பிடாது. இரவில் நன்றாக தூங்காது. எதையோ கண்டு பயப்படும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் குழந்தைக்கு இருந்தால், இந்த செடியில் இருந்து ஒரு சின்ன குச்சியை உடைத்து அந்த குழந்தையை மூன்று முறை சுற்றி, கற்பூர நெருப்பில் இந்த குச்சியை போட்டு விட்டால், அந்த கண் திருஷ்டி ஆனது உடனடியாக நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அந்த குழந்தையின் உடம்பில் ஏதாவது காத்து கருப்பு சேட்டை இருந்தாலும் அதுவும் உடனடியாக விலகிவிடும்.

- Advertisement -

இந்த குச்சி கள்ளி செடியிலிருந்து சின்னதாக ஒரு கொச்சியை உடைத்து நெருப்பில் லேசாக சுட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அந்த குச்சி கொஞ்சம் கருப்பாக மாறிவிடும். சூடு ஆறியதும் ஒரு தாயத்துக்கு உள்ளே அந்த எரிந்த கருப்பு நிற குச்சியை போட்டு, கொஞ்சமாக விபூதியை தாயத்துக்கு உள்ளே போட்டு மூடி, குழந்தைகள் கழுத்தில் கட்டி விட்டால் அவர்களுக்கு எந்த ஒரு கெட்ட சக்தியாலும் பாதிப்பு வராது. இதை பெரியவர்களும் கட்டிக் கொள்ளலாம். குறிப்பாக இந்த தாயத்தை பௌர்ணமி அமாவாசை தினங்களில் தயார் செய்வது இரட்டிப்பு பலத்தை கொடுக்கும்.

இந்த குச்சி கள்ளி குச்சியை உடைத்து அதன் மேலே ஒரு சிவப்பு காட்டன் துணியை சுற்றி நெருப்பை பற்ற வைக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை ஒன்றாக அமர வைத்து இந்த நெருப்பை அவர்களின் மூன்று முறை சுற்றி அப்படியே தூக்கி தூர போட்டு விட்டால் கண் திருஷ்டி முழுமையாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகளும் விலகும்.

சில பேர் நல்லா தான் இருப்பாங்க. திடீர்னு பேய் அடிச்சா மாதிரி இருப்பாங்க. ஏதோ காத்து கருப்பு சேட்டை பிடித்து விட்டது என்று சொல்லுவார்கள் அல்லவா. அப்படிப்பட்ட சமயத்திலும் இந்த குச்சியை வைத்து கண் திருஷ்டி எடுத்தால் உடனடியாக உடம்பை பிடித்த எதிற் மறை ஆற்றல் விலகும் என்பது நம்பிக்கை.

மேல் சொன்ன பரிகாரத்திற்கு இந்த குச்சியை நீங்கள் செடியில் இருந்து உடைக்க வேண்டும் என்றால், நகம் படாமல் உடைக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த காலத்தில் கிராம புறங்களில் முன்னோர்கள் பின்பற்றி வந்த பரிகாரர்கள் தான் இவை. காலப்போக்கில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை தீர்க்க தீப வழிபாடு

உங்களுக்கு இந்த செடி கிடைத்தால், அந்த செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கதான் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி. மேல சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் இந்த நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -