சமையலறையில் தினமும் இந்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும். உங்களுடைய அடுத்தடுத்த சந்ததியினருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டம் என்பதே இருக்காது.

kitchen
- Advertisement -

நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நமக்கு செல்வ செழிப்பை கொடுப்பதோடு, நம்முடைய தலைமுறைக்கும் தன தானியத்தில் செழிப்பை உண்டாக்கும். நாம் இறை வழிபாடு செய்வது எதற்காக. நம்முடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, நம்முடைய குழந்தைகள் அவர்களுக்கு அடுத்தடுத்து வரக்கூடிய வாரிசுகள் என்று எல்லோரும் இந்த பூமியில் பசி பட்டினி இல்லாமல் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழ நீங்கள் இன்று செய்யக்கூடிய இந்த பரிகாரம் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். ஒரு குடும்பத்தின் போன தலைமுறை செல்வ செழிப்போடு வாழ்ந்து இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படும். இந்த நிலைமை நம் குடும்பத்திற்கு நிச்சயமாக வர விடக்கூடாது என்றால் இந்த வழிபாட்டை தினம் தோறும் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

காலையில் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி விட்டு தான் நம்முடைய சமயலறைக்கு செல்வோம். சமையலறைக்கு என்று ஒரு விளக்கு மாடத்தை அடித்து அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, அன்னபூரணியை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு ‘எங்களுடைய குடும்பம் எப்போதும் பசியால் வாட கூடாது. இன்றைக்கு எப்படி வயிறார உணவை கொடுத்தாயோ, அதே போல எங்களுடைய சந்ததியினருக்கும் தினம்தோறும் வயிறார உணவு கிடைத்து ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும்’. என்ற ஒரு சின்ன வேண்டுதலை வைத்துவிட்டு அதன் பின்பு சமையலை தொடங்குங்கள்.

புரிந்ததா, நாம் இன்றைக்கு வயிறார சாப்பிட காரணம் அன்னபூரணி தான். அந்த அன்னபூரணி தாயே மனதார வேண்டிக் கொள்ளும்போது அவள் நம்முடைய சந்ததியினரையும் நிச்சயம் பத்திரமாக பார்த்துக் கொள்வாள். இந்த விளக்கை நாம் பூஜை அறையில் வைக்கப் போவது கிடையாது. தனியாக சமையல் அறையில்தான் வைத்திருக்கின்றோம். நீங்கள் சுத்தமாக இருக்கும் சமையல் குளிக்காமலும் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு சமையலை தொடங்கலாம்.

- Advertisement -

இந்த ஒரு விளக்கு உங்களுடைய குடும்ப சந்ததியினருக்கு நிறைவான ஆசீர்வாதத்தை வழங்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்கள் குலத்தில் பிறந்தவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. பசி பட்டினி என்ற வார்த்தை உங்கள் குடும்பத்தில் இருக்காது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு வழிபாடு தான் இது.

பெரும்பாலும் பூஜை அறையில் எல்லா தெய்வங்களையும் நினைத்து வழிபாடு செய்கின்றோம். ஆனால் சமைக்கும் போது மட்டும் யாரும் அன்னபூரணி தாயே நினைத்து வழிபாடு செய்வதில்லை. நமக்கெல்லாம் சோறு போடும் தாய் அவள் தானே. தினமும் அவளை நினைவு விளக்கு ஏற்றும் போது, அவளும் நம்மை நிச்சயம் மறக்க மாட்டாள். முயற்சி செய்து பாருங்கள். இந்த வழிபாடு உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததியினருக்கு நன்மை செய்யக்கூடிய வழிபாடு.

- Advertisement -