சமையலில் தெரியாமல் கூட இந்த 12 விஷயங்களை செய்து விடாதீர்கள்! சமையல் சங்கதிகள் தெரியுமா?

samayalil-seiyyakudathavai
- Advertisement -

கலையில் ‘சமையல் கலை’ என்பது மிகவும் முக்கியமானது. ஆண், பெண் என்கிற பாகுபாடின்றி சமையல் கலையை மனிதன் வளர்த்துக் கொண்டால் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ முடியும்! ஒரு ஜான் வயிற்றுக்கு தானே இந்த போராட்டம் எல்லாம் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு உணவின் முக்கியத்துவம் இன்றி அமையாதது. அதில் இந்த 12 விஷயங்களை செய்யக்கூடாதது எதெல்லாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
சமையல் கலையில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ரசத்தை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது என்பது ஏன்? முந்தைய காலங்களில் ஈய பாத்திரத்தில் ரசம் வைப்பார்கள். அதிகம் கொதித்தால் ஆகாது என்பதால் அவ்வாறு கூறப்பட்டது. ஆனால் இப்போது எவர்சில்வரில் வைப்பதால் ரசம் கொதிக்கும் முன்பு அணைக்க தேவை இல்லை.

- Advertisement -

குறிப்பு 2:
மோர் குழம்பு செய்யும் பொழுது குறைந்த தீயில் வைத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மோர் திரிந்துவிடும். மோர் குழம்பு ஆறிய பிறகே மூடி வைக்க வேண்டும். அதற்கு முன்பு மூடி போடக்கூடாது.

குறிப்பு 3:
காய்கறிகளை நறுக்கும் பொழுது எப்பொழுதும் அதன் முழு சத்துக்கள் நமக்கு கிடைப்பதற்கு பெரிது பெரிதாக நறுக்க வேண்டும். பொடிப் பொடியாக நறுக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 4:
எந்த ஒரு பொருளிலும் நீங்கள் எலுமிச்சை சாற்றை சேர்க்கும் பொழுது சூடாக இருக்கும் பொழுதே பயன்படுத்தக் கூடாது. எலுமிச்சை சாற்றை நேரடியாக முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு 5:
வெங்காயம், தக்காளி வதக்கும் போது வெங்காயத்தை வதக்கிய பின்பு தான் தக்காளியை போட்டு வதக்க வேண்டும் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வதக்கக் கூடாது.

- Advertisement -

குறிப்பு 6:
சமையல் கலையை இன்னும் சுலபமாக்க கூடிய இந்த ஃப்ரிட்ஜ் ரொம்பவே முக்கியமானது. அதில் வைக்கக்கூடாத 2 பொருட்களில் ஒன்று உருளைக்கிழங்கு, இன்னொன்று வாழைப்பழம் ஆகும்.

குறிப்பு 7:
நீங்கள் சமையல் செய்யும் பொழுது கூடுமானவரை பெருங்காயத்தூள் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி பெருங்காயம் சேர்க்கும் பொழுது தாளிக்கும் எண்ணெய் அதிகம் காயக்கூடாது.

குறிப்பு 8:
குருமா மற்றும் தேங்காய் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளில் தேங்காயை இறுதியாக சேர்க்கும் பொழுது குழம்பு அதிகம் கொதிக்கக் கூடாது.

குறிப்பு 9:
குலாப் ஜாமூன் செய்யும் பொழுதும் எண்ணெய் அல்லது நெய் அதிகம் கொதிக்க விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

குறிப்பு 10:
குழம்பு, பொரியல் என்று நீங்கள் எதைச் சமைப்பதாக இருந்தாலும் அதில் கடைசியாக தான் கொத்தமல்லி தழையை நறுக்கி போட வேண்டும். அடுப்பில் வைத்துக் கொண்டே கொத்தமல்லியை நறுக்கிப் போட கூடாது.

குறிப்பு 11:
காய்கறிகளை எப்பொழுதும் நறுக்குவதற்கு முன்பே கழுவி கொள்ள வேண்டும். நறுக்கிய பின்பு தண்ணீரில் கழுவ கூடாது. அது போல நறுக்குவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைப்பதும் கூடாது.

குறிப்பு 12:
பன்னீர் தயாரிக்கும் பொழுது பாலை திரிய செய்ய எலுமிச்சை சாறு ஊற்றுவது வழக்கம் ஆனால் அதற்கு பதிலாக தயிர் சேர்த்து பாலை திரிய செய்தால் பன்னீர் புளிக்காமல் சுவையாக இருக்கும்.

- Advertisement -