சுடுகாட்டுச் சாம்பலை பிரசாதமாக தந்து குறை தீர்க்கும் கோவில் – வீடியோ

kali amman
- Advertisement -

நாம் வாழும் இவ்வுலகத்தில் நம்மால் புரிந்துக் கொள்ள முடியாத நிரூபிக்க முடியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இன்றைய நவீனயுக விஞ்ஞானிகளாலும் கூட அறிவியல் பூர்வமான விளக்கங்களைத் தர முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுகளும் இவ்வுலகில் நடக்கத் தான் செய்கின்றன. அது போன்ற ஒரு நிகழ்வு நடைக்கும் கோவிலை பற்றி கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

தீய சக்திகளால் பாதிக்கப் பட்டவர்களின் பாதிப்புகளை நீக்க அமாவசை தினத்தன்று தான் மாந்திரீகர்கள் பூஜைகளை செய்வர். அப்படிப் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களிடம் உள்ள தீய சக்திகளைப் போக்குவதற்காக அமாவாசையன்று கூடும் இடம் தான் இந்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்.

இக்கோவிலின் ஆச்சர்யமான நடைமுறை என்னவென்றால் இவ்வூரின் சுற்று வட்டாரத்திலுள்ள, இந்த தெய்வத்தை வழிபடும் மக்களில் சிலர் இறந்த பின், அவர்களைக் இக்கோவிலின் அருகே தகனம் செய்து, மீதமாகும் அந்த இறந்தவர்களின் சாம்பலை இக்கோவிலில் திருநீறுக்கு பதில் பிரசாதமாகத் தருகின்றனர்.

மேலும் அம்மாவாசை நள்ளிரவில் இக்கோவிலின் தெய்வமான அங்காளம்மனுக்கு நடத்தப்படும் “ஊஞ்சல் சேவையில்” பல லட்சம் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபடும் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படி அந்த அங்காளம்மனை தீப ஆராதனை செய்து வழிபடும் போது நம்மைப் பிடித்துள்ள தீய சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பது இந்த பக்தர்களின் நம்பிக்கை.

- Advertisement -