ஜாதகப்படி யாருக்கெல்லாம் அதிக சம்பளம் கிடைக்கும் தெரியுமா ?

money

“உழைப்பே உயர்வு தரும்” என்பது உழைப்பின் மகிமையை போற்றும் ஒரு தமிழ் பழ மொழி. மனிதராக பிறந்த ஆணோ அல்லது பெண்ணோ எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் உழைத்து தங்கள் வாழ்க்கைக்கான பொருள் செல்வத்தை ஈட்டுகின்றனர். ஒருவர் அதிகளவு செல்வம் ஈட்ட சிறந்த வழி சொந்த தொழில் அல்லது வியாபாரம் செய்வது தான் என்றாலும் எல்லோருக்குமே அப்படியான வாய்ப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலானோர் தங்கள் தகுதிக்கேற்ப அரசு அல்லது தனியார் துறையில் மாதச் சம்பள ஊழியர்களாக இருக்கின்றனர்.

astrology

ஜோதிட அடிப்படையில் ஒரு மனிதர் பெறுகின்ற ஊதியத்திற்கு காரகனாக “சூரிய பகவான்” கருதப்படுகிறார். அப்படி சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் இருந்தால், அந்த நபருக்கு எப்படிப்பட்ட சம்பளம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியில் இருந்தாலும் (ஜாதக கட்டத்தில் இருந்தாலும்) அந்த ராசி கட்டத்தில் இருந்து 1,2,5,9 ஆகிய எண்ணிக்கையிலான ராசி கட்டங்களில் சூரியனின் நட்பு கிரகங்களான “சந்திரன், செவ்வாய், புதன், குரு” ஆகிய கிரகங்கள் இருந்தால், அந்த நபர் அதிக ஊதியம் பெறும் பணியிலிருப்பார். மேலும் அவர்களுக்கு பதவி உயர்வுகளும், அவ்வப்போது ஊதிய உயர்வு பெரும் யோகமும் உண்டாகும். இதை தெளிவாக விளக்கும் ஒரு படம் கீழே உள்ளது.

Jathaga kattam

இந்த படத்தை பார்த்தோமானால் சூரியன் இருக்கும் இடத்தில இருந்து 1,2,5,9 ஆகிய கட்டங்களில் பச்சை கோடிட்டிருக்கிறோம். இந்த கட்டங்களில் சூரியனின் நட்பு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகியவை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்ல சம்பளலாம் உண்டு. இதே போல உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தாலும் அந்த கட்டணத்தில் இருந்து 1,2,5,9 ஆகிய கட்டங்களை பார்க்க வேண்டும்.

- Advertisement -

அதுபோல ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசி கட்டத்திற்கு 1,2,5,9 ஆம் இட ராசிக்கட்டங்களில் சூரியனின் நட்பு கிரகங்கள் இருந்தாலும், அந்த ராசிக்கட்டங்களில் சூரியனின் பகை கிரகங்களான “சுக்கிரன், சனி, ராகு, கேது” கிரகங்கள் அந்த ராசிக்கட்டங்களில் இருந்தால், அந்த நபர் குறைந்த ஊதியம் கொண்ட பணிகளையே செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும் அவருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவானதாகும். இந்த விதி பிருகு நந்தி நாடியில் குறிப்பிடப்பட்டிள்ளது. இதை தெளிவாக விளக்கும் ஒரு படம் கீழே உள்ளது.

Jathaga kattam

மேலே இணைக்கப்பட்டுள்ள அதே படத்தில், சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் சனி இருக்கிறார். பிருகு நந்தி நாடி விதிப்படி ஒருவரது ஜாதககத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 1,2,5,9 ஆகிய கட்டங்களில் சூரியனின் நட்பு கிரகங்கள் இருந்தாலும் அதோடு சூரியனின் பகை கிரகங்களான “சுக்கிரன், சனி, ராகு, கேது” இவைகளில் யாவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அந்த ஜாதகருக்கு பெரிதாக ஊதியம் இருக்காது.

மேலே உள்ள விதிப்படி இல்லாமல் ஒரு சிலருக்கு மாறுதலான பலன்கள் இருக்க வாய்ப்புண்டு. அதற்கான காரணத்தை அறிய ஜாதகத்தில் லாப ஸ்தானத்தை தெளிவாக பார்ப்பது அவசியம். ஆனால் பெரும்பாலானோருக்கு மேலே உள்ள விதி பொருந்தும்.

இதையும் படிக்கலாமே:
இந்த ராசிக்காரரோடு நீங்கள் சேர்ந்தால் உங்கள் தொழில் அமோகம் தான்

இது போன்ற மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.