மாதம் ஒரு முறை 1 ரூபாயை இப்படி செலவு செய்தால், 1 லட்ச ரூபாய் கூட திரும்பவும் கிடைக்கலாம்.

1-rupee
- Advertisement -

இது என்ன சூதாட்டம் போல இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகார முறை. மாதம் தோறும் சம்பளம் வாங்கிய பின்பு ஒரு ரூபாயை மட்டும் இப்படி செலவு செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் அடுத்த மாதம் சம்பளம் வாங்கும் போது ஏதாவது ஒரு பெரிய நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சம்பளம் வாங்கியவுடன் செய்ய வேண்டிய செலவு என்ன, செய்யக்கூடாத செலவு என்ன, என்பதை பற்றிய சில சாஸ்திர ரீதியான நல்ல விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக மருத்துவச் செலவு செய்யாதீங்க. முதல் செலவாக கடன் கொடுக்காதீங்க. (சம்பளம் வாங்கி அடுத்த நாள் வாங்கிய கடனை கொடுங்க. கைநீட்டி காசு பணம் வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் இருப்பதும் தவறு.) உங்கள் வீட்டிற்கு தேவையான சுப காரியங்களை ஏதாவது செய்யலாம். முதல் சம்பளத்தை வாங்கி, 20 ரூபாய்க்கு பூ வாங்கி மனைவி அக்கா தங்கை அம்மா அல்லது சுவாமிக்கு கொடுக்கலாம். கல் உப்பு வாங்கலாம். அப்படி இல்லை என்றால் மஞ்சள் குங்குமம் வீட்டிற்கு தேவையான அரிசி பருப்பு இவைகளை வாங்கலாம். சம்பளம் கைக்கு வந்துவிட்டது தவிர்க்க முடியாத காரணத்தால் ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை என்னும் போது அதை நாம் எதுவும் செய்ய முடியாது. பிளான் பண்ணி மருத்துவமனைக்கு போறவங்க முதல் செலவை ஆஸ்பத்திரிக்கு செய்யாதீங்க.

- Advertisement -

அதுவே உங்களுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார்கள். அந்த வகையில் மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்றால் அது சுப செலவு கணக்கில் போய்விடும். மற்றபடி வீன்விரயம் செய்யக்கூடிய மருத்துவச் செலவை முதலில் செய்யக்கூடாது. சரி இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுவோம். மாதம் சம்பளம் வாங்கியவுடன் ஒரு ரூபாய்க்கு வாங்க வேண்டிய அந்த பொருள் என்ன தெரியுமா? ஊறுகாய் தான்.

ஊறுகாய் வாங்கிவிட்டால் லட்சாதிபதி ஆக முடியுமா. ஊறுகாய் வாங்கிவிட்டால் கோடீஸ்வரனாக முடியுமா என்ற கேள்விக்குள் நாம் செல்ல வேண்டாம். வாங்கிய சம்பள பணத்திலிருந்து முதல் செலவாக ஒரு ரூபாய் கொடுத்து, ஒரு மாதம் நீங்கள் இந்த ஊறுகாயை வாங்கி பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் யோகம் அடிக்கும்.

- Advertisement -

நிறைய பேர் இப்போது கடைகளில் வீட்டிற்கு தேவையான ஊறுகாய் வாங்குகின்றோம் அல்லவா. அந்த ஊறுகாயை சம்பளம் வந்த உடன் ஒரு பாட்டில் வாங்கிக்கோங்க. அப்படி இல்லையா ஒரு சின்ன பாக்கெட் வாங்கிக்கோங்க. நிச்சயமாக இந்த ஊறுகாய் வாங்கும் பரிகாரம் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மையை தரும்.

அடுத்தபடியாக எப்போதும் சொல்லக்கூடிய ஒரு விஷயம் தான். உங்களுக்கு வருமானம் வந்தவுடன் உங்களை விட கீழே இருப்பவர்களுக்கு, அதாவது உங்களை விட வசதியில் குறைவாக இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த பத்து ரூபாயாவது உதவி செய்ய வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய இந்த உதவி அடுத்த மாதம் உங்களுக்கு வருமானத்தை இரட்டிப்பாக கொடுக்கும். அப்போது நீங்கள் உங்களுடைய உதவி செய்யும் அளவை உயர்த்துக் கொள்ள வேண்டும்.

பத்து ரூபாய்க்கு செய்த தர்மத்தை, இருவது ரூபாயாக உயர்த்திக் கொள்ளுங்கள். இப்படி வருமானத்திலிருந்து ஒரு சிறு தொகையை தானம் செய்யும் போது நிச்சயமாக கடவுள் உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வாரி கொடுத்துக் கொண்டே தான் இருப்பார் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -