இந்த வாசம் எந்த வீட்டில் வருகிறதோ, அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் நிச்சயம் இருப்பதாகத் தான் அர்த்தம். இந்த வாசத்திற்கு தெய்வம் நம் வீடு தேடி ஓடோடி வந்து விடும்.

pooja-room-sivan
- Advertisement -

வீடு என்று இருந்தால் அது நிச்சயமாக தெய்வங்கள் வாசம் செய்யும் இடமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீடு கோவிலாக இருக்கும். வீட்டில் வசிப்பவர்கள் மன நிம்மதியோடு இருப்பார்கள். இறைசக்தி இல்லாத இல்லம், இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். சரி ஒரு வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்க, அந்த வீடு எப்படி இருக்க வேண்டும், இறை சக்தி இல்லாத வீட்டினை இறை சக்தி நிறைந்த வீடாக மாற்ற தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pooja-room

சுத்தமான நல்ல வாசம் வீச கூடிய இடத்தில் தெய்வசக்தி குடிகொள்ளும். துர்நாற்றம் வீசக்கூடிய இடத்தில் அசுர சக்தி கூடியிருக்கும். இவ்வளவு தான். இதில் தெய்வ சக்தியை நம் வீட்டிற்குள் குடியேற்ற நாம், நம் வீட்டு பூஜை அறையில் ஒரு முக்கியமான பொருளை பயன்படுத்த போகின்றோம். அது என்ன பொருள்.

- Advertisement -

இது ஒரு தைலம் வகையை சேர்ந்தது. சாம்பிராணி தைலம் என்று இதனை சொல்லுவார்கள். இந்த சாம்பிராணி தைலம் நாட்டு மருந்து கடைகளில், பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலேயே நமக்கு கிடைக்கின்றது. அதை ஒரு சிறிய பாட்டில் வாங்கி, உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் நிற துணியை இந்த சாம்பிராணி தைலத்தில் நன்றாக நனைத்து பிழிந்து விட்டு, அந்த மஞ்சள் துணிக்கு நடுவே சோம்பு சிறிதளவு, கிராம்பு 2, பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு, இந்த 3 பொருள்களையும் ஒன்றாக வைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.

sambrani

சாம்பிராணி தைலத்தில் நனைத்த ஈரத்துணியிலேயே இந்த மூன்று பொருட்களையும் வைத்து சிறிய முடிச்சு போல கட்டி, அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் ஆணியில் மாட்டி வைத்து விடுங்கள். இந்த முடிச்சை கிண்ணத்தில் அல்லது வேறு ஏதும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டாம்.

- Advertisement -

ஆணியில் மாட்டி வைக்கும் போது இதிலிருந்து ஒரு வாசம் வெளி வந்து கொண்டே இருக்கும். அது அந்த சாம்பிராணி தைலத்துடன் சேர்ந்த லவங்கம், சோம்பு, பச்சை கற்பூரத்தின் வாசம். குறிப்பாக இந்த வாதத்திற்கு உங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி ஈர்க்கப்படும். இந்த வாசத்திற்கு தெய்வசக்தி உங்கள் வீட்டிற்குள் வசியமாகும். இந்த வாசம் வீச கூடிய இடத்தில் நிச்சயம் தெய்வ சக்தியின் நடமாட்டம் இருக்கும்.

வீட்டிலிருக்கும் துர்தேவதைகள் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி, வீட்டிற்குள் தெய்வ சக்தி நிலையாக குடிகொள்ள இது ஒரு சுலபமான பரிகாரம். குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த சாம்பிராணி தைலமானது கோவில்களில் உள்ள சிலைகள் மேலே தடவி விடுவதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். கோவிலில் இருக்கும் சிலையில் வாழும் தெய்வம் காலத்திற்கும் அந்த இடத்திலேயே குடிகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பொருளை சன்னிதானத்தில் உள்ள சிலைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

pooja-room1

உங்கள் வீட்டில் மஞ்சள் துணியில் அந்த சாம்பிராணி தைலத்தின் வாசம் நீங்கி விட்டால், அந்த முடிச்சை மீண்டும் ஒருமுறை சாம்பிராணி தைலத்தில் நனைத்து, எடுத்து மீண்டும் மாட்டிக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை இப்படி அந்த முடிச்சை சாம்பிராணி தைலத்தில் நினைத்து மாட்டி விட்டால் போதுமானது. உள்ளே இருக்கும் பொருட்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் துர் சக்திகளின் ஆதிக்கம் இருப்பதாக உணர்ந்தால், உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இல்லாதது போல உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் நிச்சயம் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -