பி.பி.எல் : பந்து தாக்கியதால் அழுத சிறுவன். நேராக களத்திலிருந்து வெளியேறி சிறுவனுக்கு பவுலர் அளித்த பரிசு – நெகிழ்ந்த ரசிகர்கள் – வீடியோ

Sams

வருடம் தோறும் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதுபோல ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் நடைபெறுவது வழக்கம். இந்த தொடரும் ஆஸ்திரேலிய ரசிகர்களின் தொடர் ஆதரவுடன் சிறப்பாக நடந்து வருகிறது என்றே கூறலாம்.

Sam

தற்போது இந்த ஆண்டுக்கான பி.பி.எல் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகின்றன. சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்து வரும் பி.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மற்றுமொரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகளுக்கு எதிரே நடந்த போட்டியில் சிட்னி அணி வீரர் சாம்ஸ் பந்துவீச எதிரணி சேர்ந்த ஜார்ஜ் பெயிலி சிக்ஸ் அடித்தார். அந்த பந்து மைதானத்தில் போட்டியினை ரசித்து கொண்டிருந்த சிறுவன் மீது பட்டு அந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான். அதை கவனித்த சாம்ஸ் சிறுவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு, தனது தொப்பியை கைழுத்திட்டு அவனுக்கு
பரிசளித்தார். இதோ அந்த வீடியோ :

போட்டி முடிந்து இதனை அறிந்த பேட்ஸ்மேன் பெயிலி அந்த சிறுவனை சந்தித்து தனது பேட்டிங் கிளவுஸ்-ஸை அவனுக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஒரு அரசு ஊழியரின் வாழ்நாள் சம்பளத்தை வெறும் பத்து நாளில் பெரும் விராட் கோலி. பூமா நிறுவனத்துடன் கோலி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் வருமானம் எவ்வளவு தெரியுமா

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்