உங்கள் கஷ்டங்கள் குறைந்து கிரக தோஷம் நீங்க ஒவ்வொருவரும் இந்த 12 தானத்தை கட்டாயமாக செய்தேயாக வேண்டும்.

monkey-navagraha

கிரகங்கள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. நாம் செய்த பாவத்திற்கு தண்டனையாக இந்த ஜென்மத்தில் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிகாரத்தை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை என்கிறது ஜோதிடம். அதே போல் தான் நாம் நல்லது செய்திருந்தாலும் அதற்குரிய நன்மைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் வரமாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது நீங்கள் எந்த அளவிற்கு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! அந்த அளவிற்கு நீங்கள் நன்மைகளும் செய்திருக்கிறீர்கள் என்பது தான் கூற்று.

navagragha-mandhiram

எனில் நன்மைகள் செய்தால் நம்மால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்பது தெளிவாகிறது. கெட்டது செய்தால் கெட்டது நடக்கவில்லையே? அவர்களும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? என்கிற கதை நமக்கு தேவை இல்லை. அதை ஆராய்வது நம்முடைய கடமை அல்ல. அதை இறைவனின் கையில் விட்டுவிடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார். பல இடங்களில் மற்றவர்களுக்கு நாம் செய்யும் ஒரு சிறு நல்ல விஷயத்திற்கு கூட நம் மனம் அவ்வளவு ஆனந்தம் கொள்வதை நாம் உணர்ந்திருப்போம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்களால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதில் கிடைக்கும் சுகமே தனிதான்.

நாமே பஞ்சத்திற்கு அடி பட்டிருக்கிறோம்! நம்மால் என்ன மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்? என்கிற சிந்தனையை தயவு செய்து தூக்கி எறியுங்கள். ஒரு வேளை சாப்பாட்டிற்கு உணவில்லாத மனிதன் கூட மற்றவரின் பசியை போக்க தன்னுடைய உணவை கொடுப்பதை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். இதை விடவா நீங்கள் தாழ்ந்து விட்டீர்கள்? என்பதை யோசியுங்கள். தானமும், தர்மமும் தான் உங்களை அடுத்த ஜென்மத்தில் செல்வந்தராக வாழ வைக்கும். அடுத்த ஜென்மத்தில் நான் எப்படி இருந்தால் என்ன? இந்த ஜென்மத்தில் நான் கோடீஸ்‌வரனாக வாழ முடியுமா? என்கிற விதண்டாவாதம் தேவையில்லை. நல்லது நினத்தால் தான் நல்லது நடக்கும் என்று மட்டும் உறுதியாக நம்புங்கள். நல்லதே நடக்கும்.

thanam

பிறக்கும் பொழுது ஏழையாக பிறப்பது நம் கையில் இல்லை, ஆனால் சாகும் பொழுது ஏழையாக சாவது நம் கையில் தான் இருக்கிறது என்று கூறக் கேட்டிருப்போம். உண்மையில் நீங்கள் செய்யும் இந்த 12 தானங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும். இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு வாழும் காலத்தில் இந்த 12 தானங்களை செய்யுங்கள். அப்படியான தானங்கள் என்னென்ன? என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

1. ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த போது முடிந்த அளவிற்கு உடுக்க உடையும், உண்ண உணவும் தானமாகக் கொடுப்பது தோஷத்தைப் போக்கும்.

pichai-thanam

2. ஆல், அரசு, வேம்பு இந்த மூன்று மரங்களுக்கும் நீரை ஊற்றுவது தெய்வங்களின் அருளை பெற்று தரும்.

3. பித்ருக்களின் ஆசி பெற தினமும் காக்கைக்கு எச்சில் படாத உணவு வைக்க வேண்டும்.

crow feeding

4. பித்ரு தோஷம் நீங்க அகத்திக்கீரை மற்றும் வெல்லம் கலந்த பச்சரிசியை பசுமாட்டிற்கு அடிக்கடி கொடுத்து வரவேண்டும்.

5. மீன்களுக்கு பொரி போடுவது சிறு தோஷங்களை நீக்கும். அதனால் தான் கோவில் குளங்களில் பொரி போடுவதை வழக்கமாகக் கொண்டனர்.

pori

6. கோவில்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு தீபம் ஏற்ற எண்ணெய் தானம் செய்து வாருங்கள் கிரக தோஷங்கள் நீங்கும்.

7. கோவில்களில் அன்னதானம் செய்ய உதவுவதும், மக்களின் தாகம் தீர்க்க மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைப்போருக்கு உதவி செய்வதும் கஷ்டங்களை குறைக்கும்.

annadhanam 1

8. இறந்தபின் அழிந்து போகும் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் மோட்சம் கிடைக்கும்.

9. இறந்தபின் உடல் உறுப்புகளையும், வாழும் பொழுது மற்றவர்களை உயிர் வாழ வைக்கக் கூடிய ரத்தத்தையும் தானம் செய்து பாருங்கள்! தீயவை நீங்கி நன்மைகள் ஓடிவரும்.

blood-donation-compressed

10. உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தினமும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். தெருக்களில், போஸ்ட் கம்பங்களில் சிறிய வாளியில், தண்ணீரை கட்டி வையுங்கள். வாயில்லா ஜீவன்கள் அதில் தண்ணீர் குடித்த வந்தால் உங்களுக்கு எல்லா விதமான கிரக தோஷங்களும் நீங்கும்.

11. கோவில்களில், மலை ஸ்தலங்களில் இருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்து உதவுங்கள். அனுமாரின் ஆசி கிடைக்கும். வீரமும், ஞானமும் பிறக்கும்.

monkey1

12. தினமும் கோலமிடும் பொழுது கோலமாவு பயன்படுத்தாமல் பச்சரிசியை அரைத்து வைத்துக் கொண்டு அதில் கோலம் போட்டு பழகுங்கள். அதை உண்ண வரும் எறும்பு மற்றும் ஏனைய சிறு உயிர்களும் பசியாறுவதால் உங்களுடைய வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
வீட்டு பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்துவிட்டால் நம் வாழ்க்கையும் இருள் சூழ்ந்து விடும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.