குடும்பத்தில் அடிக்கடி வரும் பிரச்சனை என்றாள் அது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டைகளாக தான் இருக்கும். எந்த பிரச்சினைகளையும் சுலபமாக சமாளித்து விடலாம், ஆனால் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு தான் ஆளாக வேண்டி இருக்கும். இதிலிருந்து விடுபடுவதற்கு சமையல் அறையில் தென்கிழக்கு மூலையில் செய்ய வேண்டிய இந்த பரிகாரம் பற்றிய தகவல்களை தான் தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்த இப்பதிவை நோக்கி பயணித்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவு என்றால் குடும்பத்தில் உள்ள யாருக்குமே நிம்மதி இருக்காது. அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கும். குழந்தைகளுக்கு எதிரே முடிந்தவரை சண்டை போடுவதை தவிர்ப்பது தான் ஒரு நல்ல தாய், தகப்பனுக்கு அழகு! அடிக்கடி உங்களுக்குள் நடக்கும் சண்டைகளை தவிர்ப்பதற்கு சமையலறையில் தென்கிழக்கு மூலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது குல தெய்வத்திற்கு சக்தியை கொடுக்கும் சக்தி மூலையாக இருக்கிறது.
இந்த தென்கிழக்கு மூலையில் குலதெய்வ படம் ஒன்றை வையுங்கள். குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை குலதெய்வமாக நினைத்து இஷ்ட தெய்வத்துடைய படத்தை வைக்கலாம். பின்னர் அதற்கு முன்பாக ஒரு சிறிய தட்டில் அகல்விளக்கு ஒன்றை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். சூரியன் உதயமாகும் நேரத்திலும், சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்திலும் இருவேளையில் தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் தான் ஏற்ற வேண்டும். சைவம் அசைவம் எல்லாம் குலதெய்வத்திற்கு கிடையாது, இதனால் சமையலறையில் தென் கிழக்கு மூலையில் குலதெய்வ படத்தை வைத்துவிட்டு, சங்கோஜப் பட வேண்டாம். மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இது போல இரு வேளையும் தீபம் ஏற்றி பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும், அவை தீர்ந்து போக வேண்டும், ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்ல முடியாதவர்கள், இது போல தென் கிழக்கு மூலையில் குலதெய்வத்தை வைத்து வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். மேலும் சாதாரணமாகவே சிலர் கோவிலுக்கு செல்ல முடியாமல் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும், இது போல சமையலறையில் செய்து தொடர்ந்து விளக்கேற்றி வருவதன் மூலம் நல்ல பலன் காண முடியும்.
இதையும் படிக்கலாமே:
6-12-2024 கார்த்திகை வளர்பிறை சஷ்டி வழிபாடு
கோவிலுக்கு செல்லாதவர்கள், குலதெய்வ கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது செல்லாதவர்கள், வீட்டில் தீபம் ஏற்றி வழிபட முடியாதவர்கள், கண் திருஷ்டி பிரச்சனைகள் இருப்பவர்கள், செய்வினை கோளாறுகள் உள்ளவர்கள், கணவன் மனைவிக்குள் தீராத பிரச்சனைகள் இருப்பவர்கள் இது போல அகல் தீபம் ஒன்றை தினமும் குலதெய்வத்திற்கு ஏற்றி வைக்க வேண்டும். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து இது போல செய்து வாருங்கள், விரைவிலேயே நல்ல பலனை நீங்கள் காணலாம். சூரியன் உதயம் ஆகும் பொழுது தீபம் ஏற்றுபவர்கள் குளித்துவிட்டு தான் ஏற்ற வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. சூரிய அஸ்தமனத்தின் பொழுது சுத்தபத்தமாக ஏற்றினால் போதும். உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலையில் எழுந்து ஏற்றி வாருங்கள், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.