சண்டிகேஸ்வரருக்கு இப்படி செஞ்சா ஏழேழு தலைமுறைக்கும் வறுமையே வராதாம் தெரியுமா? இது தெரிஞ்சா இனி சண்டிகேஸ்வரரிடம் இப்படி தெரியாம கூட செய்யவே மாட்டீங்க!

sandikeswarar-history1
- Advertisement -

விநாயகர் கோவில் மற்றும் சிவன் கோவில்களில் அதிகம் இடம் பெற்று இருக்கும் இந்த சண்டிகேஸ்வரருக்கு பல்வேறு விதமான வழிகளில் வழிபட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. சண்டிகேஸ்வரரை வழிபடும் பொழுது, அவருடைய காதுக்கு கேட்காதவாறு சொடக்கு போட்டு கூப்பிடுவதும், கைதட்டி வழிபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இது முற்றிலும் தவறான ஒரு விஷயமாகும். சண்டிகேஸ்வரரை முறையாக வழிபடுவது எப்படி? ஏன் அவரை அப்படி வழிபட வேண்டும்? ஈரேழு ஜென்மத்திற்கும் வறுமை உண்டாகாதவாறு, செல்வ செழிப்புடன் வாழ சண்டிகேஸ்வரரை வழிபடும் முறை என்ன? என்பது போன்ற பயனுள்ள ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

ஒரு மனிதன் எந்த கடவுளை எப்படி வழிபட வேண்டும்? எதற்காக அவ்வாறு வழிபட வேண்டும்? என்பதை தெரிந்து வழிபடுவது முறையானது. அந்த வகையில் சண்டிகேஸ்வரரை பற்றிய புரிதல் பலருக்கும் தவறாக இருந்து வருகிறது. சண்டிகேஸ்வரர் தீவிரமான சிவபக்தர் ஆவார். இவர் ஒரு முறை சிவனின் மீது கொண்ட பேரன்பினால் மண்ணால் அழகிய சிவலிங்கம் ஒன்றை வடிவமைத்து அதற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்து வழிபட்டு வந்தார். சிறு வயதிலேயே இவர் இது போல செய்து வந்தது அவருடைய தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சண்டிகேஸ்வரர் சிவலிங்கத்திற்கு தினமும் நிறையவே பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தார்.

- Advertisement -

மண்ணிற்கு பாலை ஊற்றி இப்படி வீணடிக்கிறானே என்று தந்தை அங்கலாயித்து ஒரு முறை சண்டிகேஸ்வரர் செய்த மண்ணை எட்டி உதைத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சண்டிகேஸ்வரர் ஒரு குச்சியை எடுத்து அவருடைய தந்தையின் மீது வீசிவிட்டான். அந்த குச்சி திடீரென கோடாரியாக மாறி அவனுடைய தந்தையின் கால்களையே வெட்டி வீசியது.

சிவன் மீது கொண்ட இவனுடைய மாசற்ற பக்தி, சிவனை மெய் சிலிர்க்க வைத்தது. இதனால் அவருடைய கோவில்கள் அனைத்திலும் சண்டிகேஸ்வரர் வழிபாடு இருக்க வேண்டும் என்றும், சண்டிகேஸ்வரர் இனி அவருடைய உணவு மற்றும் உடைக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வரம் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை அனைத்து சிவாலயங்களிலும் சண்டிகேஸ்வரருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. சண்டிகேஸ்வரரை வழிபடுபவர்கள் புது வஸ்திரத்தை வைத்து வழிபட வேண்டும், ஆனால் நாளடைவில் இது மருவி வஸ்திரத்தில் இருந்து ஒரு நூலை மட்டும் பிரித்து அவருடைய மேனியின் மீது வைத்து விட்டு செல்வதை போன்று புராணத்தையே மாற்றி விட்டனர்.

- Advertisement -

வெறும் நூலைக் கொண்டு சண்டிகேஸ்வரரை வழிபடுவது முறை அல்ல! வஸ்திரம் வைத்து வழிபட்டால் இனி உங்களுடைய தலைமுறையினருக்கு வஸ்திரத்திற்கு பஞ்சமே ஏற்படாது, நல்ல ஆடைகளும், வறுமை இல்லா வாழ்வும் அமைய வஸ்திரம் வைத்து வழிபடுவார்கள். அது மட்டுமல்லாமல் சுப காரிய தடைகள் விலகவும், புது வஸ்திரம் வைத்து வழிபட வேண்டும். மேலும் சண்டிகேஸ்வரரை வழிபடும் பொழுது கையைத் தட்டி வழிபடக் கூடாது. கையை மேல் நோக்கி என் கையில் நான் எதுவும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்பதை உறுதிப் படுத்த இரண்டு கைகளையும் உரசி காண்பிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் இந்த செடி இல்லையா? இந்த செடி எந்த அளவிற்கு பூத்து குலுங்குகிறதோ, அந்த அளவுக்கு சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகிக்கொண்டே செல்லும்.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். சிவன் கோவிலில் இருந்த நான் எதையும் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரிடம் கூறிவிட்டு செல்லவே, இவ்வாறு கைகளை உரசி காண்பிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் சண்டிகேஸ்வரர் வழிபாடு மாறியதால் கையை தட்டி வழிபடும் வழக்கம் வந்தது. எனவே இனியும் சண்டிகேஸ்வரரை தவறான முறையில் வழிபடாமல், இந்த முறையில் வழிபட்டால் வறுமை இல்லாத வாழ்வு உங்களின் ஏழேழு தலைமுறைக்கும் கிடைக்கும்.

- Advertisement -