ராகு கேதுவால் ஏற்படும் தோஷம் நீங்க சந்தன பரிகாரம்.

raghu kedhu
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தாலும், வாழ்வதற்கு விருப்பம் இல்லாத இருந்தாலும், கஷ்டங்களை மட்டுமே சந்தித்து கொண்டு இருந்தாலும், அவர்கள் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட ராகு கேதுவின் பாதிப்பிலிருந்து வெளியில் வருவதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய மிகவும் எளிமையான ஒரு பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு திசையோ அல்லது கேது திசையோ நடந்தாலோ அல்லது வேறு ஏதாவது திசையில் ராகு புத்தியோ அல்லது கேது புத்தியோ நடந்தால் அதனால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படும். பிறரிடம் ஏமாறுதல் அல்லது ஏமாற்றப்படுதல், நாம் அமைதியாக இருந்தாலும் நம்மை தேடி பிரச்சினைகள் வருவது, யாருடனும் எதிலும் விருப்பமில்லாமல் இருப்பது போன்றவை நிகழும். அப்படிப்பட்டவர்கள் ராகு கேதுவிற்குரிய பரிகார முறைகளை செய்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வர முடியும்.

- Advertisement -

இந்த பரிகார முறை ராகு கேது என்று இருவருக்கும் பொதுவாகவே அமையக்கூடியது என்றாலும் ராகுவிற்கு சனிக்கிழமையிலும் கேதுவிற்கு செவ்வாய்க்கிழமையிலும் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது சந்தன ஊதுபத்தி மட்டுமே. நம் வீட்டு நுழைவாசலின் இரண்டு புறங்களிலும் இரண்டு சந்தன ஊதுபத்திகளை பொருதி வைக்க வேண்டும். வலது பக்கமாக பொருதி வைக்கப்படும் சந்தன ஊதுபத்தி ராகுவிற்கும், இடது பக்கமாக பொருதி வைக்கப்படும் சந்தன ஊதுபத்தி கேதுவிற்கும் உரியதாக கருதப்படுகிறது.

வீட்டு நுழைவாயில் என்று சொல்லும் பொழுது நாம் வெளியில் இருந்து உள்ளே வரும் பக்கமாக வைக்க வேண்டும். உள்ளிருந்து வெளியே செல்லும் பக்கமாக வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாம் காலையிலும் மாலையிலும் நம்மால் இயன்ற அளவு சந்தன ஊதுபத்திகளை பொருதி வைப்பதன் மூலம் நமக்கு ராகு கேது தோஷம் விலக ஆரம்பிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த நறுமணமானது நம் மனதில் ஒருவித புத்துணர்ச்சியையும் நல்ல எண்ணங்களையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த ராகு கேது பாதிப்பில் இருப்பவர்கள் தினமும் குளிக்கும் பொழுது அவர்கள் குளிக்கும் தண்ணீரில் சந்தன எண்ணையை விடுவது, தலையில் சந்தன எண்ணையை தேய்ப்பது அல்லது சந்தன எண்ணையை போட்டு போல் வைத்துக் கொள்வது, சந்தன எண்ணையை நிலை வாசலில் தெளிப்பது, சந்தனத்தை குழைத்து நெற்றியில் வைத்துக் கொள்வது என்று ஏதாவது ஒரு ரூபத்தில் சந்தன நறுமணம் கமலும் வகையில் செய்வதன் மூலம் ராகு கேதுவால் ஏற்படும் தோஷங்களில் இருந்து படிப்படியாக விலக முடியும்.

இதையும் படிக்கலாமே: வாரா கடன் வசூலாக பரிகாரம்.

இந்த எளிமையான சந்தன பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் செய்து ராகு கேதுவால் நமக்கு ஏற்பட்ட தோஷங்களில் இருந்து வெளிவந்து நிம்மதியுடன் வாழ்வோம்.

- Advertisement -