உங்களுக்கு சகல சம்பத்துகளும் உண்டாக இந்த சுலோகம் துதியுங்கள்

sani-bhagavan
- Advertisement -

ஒருவர் வாழ்வில் அணிவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் அவரவர் பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம பலன்கள் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என நமது வேதங்கள் கூறுகின்றன. நவகிரகங்கள் இறைவனின் பிரதிநிதியாக செயல்பட்டு ஒரு மனிதனின் கர்ம பலன்களை அனுபவிக்க செய்கின்றனர். இந்த கிரகங்களில் மனிதர்களின் மீதான சனி கிரகத்தின் தாக்கம் மிக வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. அந்த சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் பாதிப்புகளை நீக்கும் சனீஸ்வர ஸ்லோகம் இது.

sani bagavaan

சனீஸ்வர ஸ்லோகம்

கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு
க்ருஷ்ண ஸனி பிங்களமந்தசௌரி

- Advertisement -

நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

Sani Bagavan

தசரத சக்கரவர்த்தி அறிந்து கூறிய சனிஸ்வர ஸ்லோகங்களில் ஒரு ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 108 முறை துதிப்பது சிறந்தது. சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சங்கு பூக்களை சமர்ப்பித்து, இம்மந்திரத்தை 108 முறைகள் துதிப்பதால் ஜாதகத்தில் சனி கிரகம் பாதக நிலையால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். நோய் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும். சகல சம்பத்துகளும் உண்டாகும்.

- Advertisement -

Sani baghavan

“முடிவு செய்பவன், ரௌத்திரன், இந்திரியங்களை வென்றவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனீஸ்வரன் நம்மால் தியானிக்கபடுபவனாக இருந்து, நமது சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனீஸ்வரனுக்கு எனது நமஸ்காரம்” என்பதே மேற்கண்ட ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும். இந்த ஸ்லோகத்தை துதித்து சனீஸ்வரனை வழிபடுபவர்களின் சகல துன்பங்களும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Saneeswara sloka in Tamil. It is also called as Sani bhagavan mantra in Tamil or Sani dosham neenga manthiram in Tamil or Sani bhagavan manthirangal in Tamil or Sani bhagavan thuthi in Tamil.

- Advertisement -