உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க சுலோகம் இதோ

sivan

பூமியில் நாம் காணும் பிற உயிர்கள் அனைத்தும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் வாழ்கின்றன. ஆனால் மனிதர்களுக்கு மட்டும் மனம் என்ற ஒன்று இருப்பதால், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளால் மனக்கவலைகள், வருத்தங்கள், துயரங்கள் போன்றவைகள் ஏற்பட்டு மன அமைதி இல்லாத நிலையை உண்டாக்குகின்றன. இத்தகைய சங்கடங்கள் தீரவும், வளமையான எதிர்காலம் ஏற்படவும் சிவபெருமானுக்குரிய “சர்வேஷ்வர ஸ்லோகம்” இதோ.

god siva

சர்வேஷ்வர ஸ்லோகம்

ஓம் நமோ பக்வதே சர்வேஷ்வராய
ஷ்ரியஹ் பதயே நமஹ

சர்வேஷ்வரனாக இருக்கும் சிவபெருமானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்தும் 108 முறை உரு ஜெபிப்பது நல்லது. மாதந்தோறும் வருகின்ற பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் காலை அல்லது மாலை வேளைகளில் 108 முதல் 1008 முறை ஒரு மந்திர ஜெபம் செய்வதால் உங்கள் வாழ்வில் தற்போது இருக்கின்ற அனைத்து பிரச்சனைகளும் சிறிது சிறிதாக நீங்கப் பெறும். மனக்கவலைகள், வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வளமான எதிர்காலம் உண்டாகும்.

sivan lingam

உலகநாதன் எனப்படும் சிவபெருமான் உயிர்களில் வேறுபாடு காண்பது கிடையாது. தூய்மையான பக்தி கொண்ட பக்தர்களுக்கு அனைத்து வரங்களையும் தருபவர் சிவபெருமான். எனவே தான் விலங்குகள் முதல் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என அனைவரும் தவமிருந்து சிவனை வழிபட்டு பல வரங்களைப் பெற்றுள்ளனர். சிவ வழிபாடு செய்பவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உருவாகும். மேற்கண்ட சிவ ஸ்லோகத்தை முழுமையான நம்பிக்கையுடன் துதிப்பவர்கள் அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
நினைத்த காரியம் நிறைவேற மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sarveshwara slokam in Tamil. It is also called as Shiva mantras in Tamil or Siva manthirangal in Tamil or Prachanaigal theera in Tamil or Siva peruman manthirangal in Tamil.