- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். சனிபகவானால் உங்களுக்கு இனி...

இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். சனிபகவானால் உங்களுக்கு இனி எந்த கஷ்டமும் வராது.

- Advertisement -

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு நாம் செய்த நல்லது கெட்டதுக்கு இணையாகத் தான், நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதும் நடக்கின்றது. இதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற இந்த பழமொழிக்கு ஏற்ப, நாம் முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளுக்கு பலனை தற்போது அனுபவித்தே ஆக வேண்டும். இது விதி. இதை மாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது. இருப்பினும் தாங்க முடியாத துயரங்கள் வரும் சமயத்தில் செய்த பாவங்களை நினைத்து வருத்தப்பட்டு இனி எந்த ஜென்மத்திலும், இந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொள்பவர்களுக்கு நிச்சயமாக சலுகைகள் உண்டு, இந்த பிரபஞ்சத்தில்.

blue sangu poo

நீங்களும் தீர முடியாத துயரத்தில் சிக்கிக் கொண்டிருந்தால், மீளமுடியாத கஷ்டத்தில் துவண்டு போயிருந்தால் இறைவனிடம் ஒருமுறை மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். செய்த பாவத்திற்காக. பெரும்பாலும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த பாவத்திற்கான தண்டனையை இந்த ஏழரை சனி காலத்தில் தான் நாம் அனுபவிப்போம்.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு முப்பது வருடத்திற்கு ஒருமுறை கட்டாயமாக இந்த ஏழரை சனி காலம் என்பது வந்து போகத்தான் செய்யும். இதற்கு அஞ்சி கொண்டு வீட்டுக்குள்ளேயே பயந்து முடங்கி கிடந்தால் வாழ்க்கையை நடத்த முடியுமா. நிச்சயம் முடியாது. உங்களுக்கு சனி பகவானால் எந்த தோஷம் இருந்தாலும் சரி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, பாத சனி, கண்டகச் சனி, எந்த சனி தோஷம் இருந்தாலும் சனி பகவானை நினைத்து வீட்டிலிருந்தபடியே இந்த பரிகாரத்தை மட்டும் 8 சனிக்கிழமைகள் செய்து வாருங்கள் போதும். நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

ellu 1-compressed

சனிக்கிழமை பரிகார தீபம் ஏற்றுவதற்கு முன்பு காலையில் எழுந்து தலைக்கு குளிக்க வேண்டுமல்லவா. இரண்டு சிட்டிகை எள்ளு, 9 மிளகு, இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் குளிக்கப் போகும் அந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு, இந்த இரண்டு பொருட்கள் சேர்த்து வைத்திருக்கும் இந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். சனிக்கிழமை காலை இப்படி ஸ்னானம் செய்து விட்டு அதன் பின்பு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இரண்டு மண் அகல் தீபங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். அந்த எண்ணெயில் நீல நிறத்தில் இருக்கும் சங்குப்பூ ஒவ்வொன்று போட்டு விடுங்கள். வயலட் நிற சங்கு பூ என்றும் இதை சிலர் சொல்லுவார்கள்.

agal-vilakku-deepam

நல்லெண்ணெயில் இந்த சங்கு பூவை போட்டுவிட்டு உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கு திரி போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையிலோ இந்த தீபத்தை ஏற்றிவைத்து, சனி பகவானை மனதார வேண்டிக் கொண்டாலே, கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும். இந்த இரண்டு விஷயங்களை 8 வாரம், 8 சனிக்கிழமை செய்து பாருங்கள். நிச்சயமாக நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்