சங்கு தீர்த்த மந்திரம் சொன்னால் போதும், எந்த கடனும் நீங்கி செல்வம் பெருகும் என்பது நிச்சயம்.

சங்கு வகைகளில் சில வகை சங்குகள் தெய்வீக தன்மை கொண்டது. அதில் வலம்புரி சங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. இறைவனின் ஆசி பெற பிறந்த குழந்தைகளுக்கு வலம்புரி சங்கில் பால் புகட்டும் நடைமுறை சம்பிரதாயம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். இத்தகைய சக்தி வாய்ந்த வலம்புரி சங்கு சிறிய அளவில் உங்களிடம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை உச்சரித்து பரிகாரம் செய்தால் எந்தவிதமான கடனும் நீங்கி விடும். உங்களது உழைப்பு வீணாவது தடுக்கப்படும். செல்வம் சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.

valampuri-sangu

உங்களிடம் இருக்கும் சிறிய அளவில் உள்ள வலம்புரி சங்கை சுத்தமான நீர் கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அதில் இரண்டு துளசி இலைகளை பறித்து போட்டுக் கொள்ளுங்கள். ஸ்ரீமன் நாராயணன் துளசியில் இருந்தும், வலம்புரி சங்கில் மகாலட்சுமியும் அமர்ந்தும் அருள் புரிவார்கள். இந்த சங்கை உங்களது இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் மூடிக் கொள்ளவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உச்சரிக்க வேண்டும்.

மந்திரம்:
ஓம் சுதர்சனாய நமஹ|
ஓம் மஹாவிஷ்ணவே நமஹ||

sangu

முழு மனமும் தியான நிலையில் இந்த மந்திரத்தை உச்சரித்த பின்னர் சங்கில் இருக்கும் நீர் புனிதமாகிறது. இந்த புனித தீர்த்தத்தை அப்படியே வலது கையில் சிறிது ஊற்றி தலையில் தெளித்து கொள்ளுங்கள். மீண்டும் சிறிது இதே போல் ஊற்றி தீர்த்தமாக அருந்த வேண்டும்.

- Advertisement -

இந்த சங்கு தீர்த்த பரிகாரத்தை தினமும் செய்யலாம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் சிறப்பான பலன் பெறலாம். இயலாதோர் 7:30 மணிக்குள்ளாக செய்துவிடுவது நல்லது. தினமும் செய்ய முடியாவிட்டாலும், சனிக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளிலும் தொடர்ந்து செய்து வரலாம்.

sangu

இந்த மந்திரம் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனம் ஒருநிலைப்படும். எண்ண அலைகளில் நேர்மறை ஆற்றல் பெருகும். புத்திக் கூர்மை அடையும். சங்கு தீர்த்தம் அருந்துவதால் தெய்வீக சக்தி பெறுவீர்கள். ஆன்மீக பலம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். சிந்தை மாசு நீங்கி நல்லொழுக்கம் உண்டாகும். வீட்டில் நிம்மதி நிலைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வ வளம் பெருக செய்யும் அற்புத சக்திகள் நிறைந்த பரிகார முறை. முழு நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
நாளை சித்திரை வியாழன்! உங்களது தலையெழுத்து மாற, பிரம்மதேவனை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Valampuri sangu valipadu murai. Mahavishnu mantras Tamil. Vishnu manthiram Tamil. Vishnu manthirangal Tamil. Sangu manthiram.