இந்த 6 விஷயங்கள் உங்கள் வீட்டில் நீங்கள் செய்தால் உங்களை சனி பகவான் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தமாம்! ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

eating-food-sani-bagavan
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நல்லதும், கெட்டதும் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் நல்லதே செய்தால் கூட கெட்டது நடக்கிறது என்றால் உங்களுக்கு பூர்வ ஜென்ம கர்மா இருக்கிறது என்று அர்த்தம். இதற்காக அதிகப்படியான நன்மைகளை செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வது நல்லது. லாப, நஷ்ட கணக்கு போல, சனி பகவான் நம் வாழ்க்கையில் பாவ கணக்குகளுக்கு சரியாக கணக்குப் பார்த்து தண்டனையும் கொடுத்து விடுகிறார். ஜாதகம் பார்க்காமல் இங்கே நம்மை சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை எப்படி அறிவது? இதை அறிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

Sani-bagavan

ஒரு மனிதனுடைய குணாதிசயத்தில் அதிகம் பிடிவாதம் பிடிப்பதும், சோம்பல் தனமாக இருப்பதும் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துவதை உணர்த்துகிறது. எதிலும் சோம்பல், எதற்கெடுத்தாலும் பிடிவாதம் என்று இருப்பவர்களிடம் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். சாப்பிட்ட கையை கூட கழுவாமல் காய வைத்து கொண்டு டிவி பார்ப்பது, மற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவது போன்ற செயல்களை செய்தால் நிச்சயம் அங்கு சனி பகவான் வெகுவாக ஆதிக்கம் செய்கிறார் என்பது தான் அர்த்தம்.

- Advertisement -

குடும்பத்தில் ஒருவரை பிடித்து இருக்கும் சனி பகவானால் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சில துன்பங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த சனி தோஷத்தால் உங்கள் சகோதரருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். அதே போல சகோதரியின் வாழ்க்கையில் திருமண தடைகள் ஏற்படலாம். இது போன்ற விஷயங்களில் சனி பகவான் வழிபாடு நன்மைகளை கொடுக்கும்.

iron-nail-aani

சனி பகவான் வீட்டில் இருக்கும் எந்தெந்த பொருட்களில் ஆட்சி செய்கிறார் தெரியுமா? வீட்டில் இருக்கும் குப்பைகள், ஜன்னல், கதவுகளுக்கு போடப்பட்டிருக்கும் திரை விரிப்புகள், துருப்பிடித்த இரும்பு கம்பிகள், இரும்பு குவியல்கள், இரும்புப் பொருட்கள் போன்றவற்றில் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். மேலும் வீட்டில் எங்காவது நீர் தேக்கம் ஏற்பட்டு சாக்கடை நாற்றம் அடிப்பது, பொருட்களை குப்பை போல ஒரே இடத்தில் சீரற்ற நிலையில் அடுக்காமல் வைப்பது, சாப்பாட்டு மேஜை போன்ற இடங்களிலும் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே இந்த பொருட்களை எல்லாம் சுத்தமாக வைத்திருப்பதும், ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதும் அவசியமாகும். தேவையற்ற பொருட்களை வெளியில் தூக்கி எறிந்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு மனிதன் சோம்பேறித்தனப்பட்டு கட்டிலில் அமர்ந்து உணவு சாப்பிடுவது, படுத்துக் கொண்டே சாப்பிடுவது போன்ற செயல்களை செய்யும் பொழுது அவனிடம் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக குழந்தைகள் படிக்கும் பொழுது சாப்பிடக்கூடாது! ஒன்று சாப்பிடவேண்டும் அல்லது படிக்க வேண்டும், சாப்பிட்டுக் கொண்டே படிப்பது சனி தோஷத்தை ஏற்படுத்தும். வீட்டின் மூலைகளில் குப்பைகளை சேகரிப்பது சனி பகவானுடைய ஆதிக்கம் இருப்பதை உணர்த்துகிறது. எனவே மூலை முடுக்குகளை கூட சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

seruppu-slipper

அதே போல நீங்கள் போட்டிருக்கும் மிதியடிகள், செருப்புகளை அடுக்கி வைக்கும் செருப்பு ஸ்டாண்ட், திரை சீலைகள் போன்றவற்றை எப்பொழுதும் அழகாக, நேர்த்தியாக, சுத்தமாக அடுக்கி வைத்து இருக்க வேண்டும். அழுக்கு பிடித்தது போலவும், குப்பைகள் போலவும் வைத்திருந்தால் அங்கு சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். மேலும் சனி பகவான் ஆதிக்கம் இருந்தால் வீட்டில் யாருக்காவது நரம்புத் தளர்ச்சி பிரச்சனை, கை கால் மூட்டுவலி, வாயு கோளாறு பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

agal-vilakku-deepam

இவை எல்லாவற்றையும் வைத்து நம்மிடம் சனி பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை நாம் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். வீட்டையும், உங்களையும் எப்போதும் சுத்தமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்திருப்பது பாதி பிரச்சனையை குறைக்கும். மீதி பிரச்சனை நீங்க சனி பகவான் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள சந்நிதியில் நல்லெண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும். சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் போட்டாலே சனி தோஷம் நீங்கி நிறைய நன்மைகளைப் பெறலாம். இதற்காக பெரிதாக பரிகாரம் எதுவும் தேவையில்லை. இவற்றை நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயன் பெறலாமே!

- Advertisement -