வாழ்வில் சனி பகவானால் சந்தோஷம் மட்டும் வர வேண்டும் என்றால் நெற்றியில் தினமும் இதை இட்டுக் கொள்ளுங்கள்.

sani
- Advertisement -

சனிபகவான் என்று சொன்னதும் நமக்கு பக்தி வருகிறதோ இல்லையோ, முதலில் பயம் வந்துவிடும். சனி பகவான் என்று சொன்னாலே பதட்டம்தான். சனி பகவானை பார்த்து எதற்காக பயப்பட வேண்டும். பயப்படவே வேண்டாம். தவறு செய்தவர்கள் தான் சனிபகவானை பார்த்து பயப்பட வேண்டும். சனி பகவான் நம்முடைய வாழ்க்கையில் எந்த கெடுதலையும் செய்ய மாட்டார். நாம் செய்த தவறுக்கான தண்டனையை கொடுக்கக் கூடிய வேலையைத்தான் அவர் செய்கின்றார். ஆக நேர்வழியில் நடப்பவர்கள், சனி பகவானை கண்டு அஞ்ச வேண்டிய அவசியமே கிடையாது. பக்தியோடு அவரை வழிபாடு செய்து வந்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

சரிங்க. சனி பகவானால் உண்டாக்கக்கூடிய கஷ்டங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், எதை தினமும் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கான பதில் தானே உங்களுக்கு தேவை. பார்த்து விடலாம். சுத்தமான சந்தனத்தை தினமும் நெற்றியில் இட்டு வந்தாலே சனி பகவானால் வரக்கூடிய பிரச்சினைகள் தானாக சரியாகும். சந்தன மரத்துண்டை கட்டையில் இழைத்து அதைத் தொட்டு நெற்றியில் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். நெஞ்சில் பூசிக்கொள்ளலாம்.

- Advertisement -

சுத்தமான சந்தனமாலை, சந்தன கட்டையில் செய்திருப்பார்கள் அல்லவா. அந்த சந்தன மாலையை அணிந்து கொண்டாலும் சனிபகவானால் பெரிய அளவில் பிரச்சனை வராது. சந்தனம் இருக்கும் இடத்தில் எல்லாம் சனி பகவான் ஆசீர்வாதங்களை வழங்கி விடுவார். சனி பகவானுக்கும் சந்தனத்திற்கும் அப்படி என்ன ஒரு தொடர்பு இருக்கிறது. இதற்கான விடையையும் தெரிந்து கொள்வோமா.

சனிபகவானின் அதி தேவதையாக சொல்லப்படுபவர் எமதர்ம ராஜா. இந்த எமதர்மராஜாவிற்கு தனி சன்னிதானம் உள்ள ஸ்தலம் என்றால் அது சிறுவாஞ்சியம். இந்த திருத்தலத்தின் தல விருச்சமாக இருப்பது சந்தன மரம். ஆகவேதான் சனி பகவான் சந்தன பிரியராக இருக்கின்றார். சனி தோஷத்தால் அதிக அளவில் கஷ்டப்பட்டு வருபவர்கள் ஒரு முறை இந்த ஸ்தளத்திற்கு சென்று வழிபாடு செய்து வந்தால், சனி தோஷங்களால் உண்டாக்கப்படக்கூடிய கஷ்டங்கள் குறையும் என்பது நம்பிக்கை. இந்த கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனால்தான் வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் கட்டில்கள் என்று சந்தன மரத்தால் பொருட்களை செய்தார்கள். சந்தன மரத்தை சனி பகவானே வணங்குவார் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆக சந்தன மரம், சந்தனம் இருக்கக்கூடிய இடத்தில் எல்லாம் சனி பகவான் மன குளிர்ச்சியோடு இருப்பார்.

தினமும் சனி பகவானை நினைத்து நெற்றியில் சந்தனம் இட்டு வருபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதற்காக எல்லா தவறையும் செய்துவிட்டு சந்தனத்தை இட்டுக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீங்க. அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு.

அறிந்தே செய்ய தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்கும் போது அதற்கான தண்டனைகள் குறைக்கப்படுமே தவிர, தண்டனையிலிருந்து முழுமையாக தப்பிக்கவே முடியாது. சனிபகவானுக்கு கலி புருஷன் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. கலியுகத்தில் பிறந்து சேர்த்த கர்மாவை, சரி செய்ய கலி புருஷனால் கொடுக்கப்படும் நல்லது கெட்டதை ஏற்றே ஆக வேண்டும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -