இந்த 5 ராசிக்கு சனி பகவானின் சிறப்பு அருள் எப்போதும் உண்டு. சனியால் இவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

sani-bagavan
- Advertisement -

சனிப்பெயர்ச்சி என்றாலே 12 ராசியில் பிறந்தவர்களும் தங்களுக்கு எத்தகைய பலன்கள் ஏற்படும் என எண்ணி பயப்படும் ஒரு நிலையை நாம் காண்கிறோம். எனினும் சனி பகவான் அனைத்து ராசியினருக்குமே தனது பெயர்ச்சி காலங்களில் கஷ்டங்களை தருவதில்லை என்பது உண்மை. சனி கிரக பெயர்ச்சி காலத்தில் அதிக துன்பங்களை அனுபவிக்காத அதிர்ஷ்ட ராசியினர் யார் என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி என்பது சுக்கிர பகவானுக்குரிய ராசியாகும். அசுர குருவான சுக்கிர பகவான் ஆயுட்காரனாகிய சனி பகவானுக்கு நட்பு கிரகமாகிறார். எனவே ரிஷப ராசியிக்கு சனி பகவான் நட்பாக இருக்கின்ற காரணத்தினால், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற காலங்களில் இந்த ராசியினருக்கு அதிக பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாமல் காக்கிறார். பொதுவாக இந்த ராசியினர் மேற்சொன்ன சனி கிரகத்தின் பாதகமான பெயர்ச்சிக் காலங்களில் அதிக துன்பங்களை அனுபவிக்காமல் கடந்து விடுவார்கள்.

- Advertisement -

கடகம்
கடக ராசி என்பது சந்திர பகவானுக்குரிய ராசியாகும். ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சந்திர பகவானை எதிரியாக கருதுகின்ற கிரகங்கள் இருக்கின்றனரே தவிர, சந்திர பகவான் எந்த கிரகத்தையும் எதிரியாக கருதுவதில்லை. அந்த வகையில் சனி பகவான் கடக ராசியினருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற காலங்களில் கடும் துன்பங்கள் ஏற்படாமல் தடுத்து விடுகிறார். சனிபகவான் இந்த ராசியினரை தங்களின் சொந்த உழைப்பினால் மேன்மையான வாழ்க்கையை வாழ செய்கிறார்.

துலாம்
துலாம் ராசி என்பது சுக்கிர பகவானின் ஆட்சி வீடாகவும், சனி பகவான் உச்சமடைய வீடாகவும் இருப்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள், சனி கிரகத்தின் ஏழரைச் சனி, அஷ்டம சனி மற்றும் ஜாதக அடிப்படையில் வருகின்ற சனி திசை போன்ற கேடான கிரக காலங்களில் வாழ்வில் கஷ்டங்களை அனுபவிக்காமல் கடந்து விடக்கூடிய யோகம் பெறுகிறார்கள். இந்த ராசியில் பிறந்த சிலருக்கு சனி பகவானின் இத்தகைய பாதகமான காலங்களிலும் எதிர்பாராத யோகங்கள் ஏற்படும்.

- Advertisement -

மகரம்
மகர ராசி என்பது சனிபகவானின் சொந்த வீடாகவும், செவ்வாய் பகவானின் உச்சவீடாகவும் திகழ்கிறது, எனவே இந்த ராசியினருக்கு சனிபகவானின் திட மனமும், செவ்வாய் பகவானின் கடின உழைப்பு, சுறுசுறுப்பு போன்ற தன்மைகள் ஒருங்கி இருப்பதால், சனிபகவானின் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும் பாதகமான பலன்கள் அதிகம் ஏற்படாது. இந்த ராசியில் பிறந்து சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களும் மற்றும் ராணுவம், காவல்துறை போன்ற பணிகளில் இருப்பவர்களும் சனி பகவானின் அருட்கடாட்சத்தால் மிகவும் உயர்வான நிலையை அடைவார்கள்.

கும்பம்
கும்பம் என்பது சனி பகவானின் மற்றொரு சொந்த வீடாகும். பொதுவாக கும்ப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் “எதையும் தாங்கும் இதயம்” கொண்ட மனிதர்களாக திகழ்வார்கள். எனவே இந்த ராசியினருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி கிரக பீடைக்காலம் என்பது, இவர்களுக்கு வாழ்வில் மற்ற நாட்களை போன்ற சராசரி நாட்களாகவே இருக்கும். அதே நேரம் தன் சொந்த ராசியில் பிறந்தவர்களை சனி பகவானும் அதிக துன்பங்களை அனுபவிக்காமல் தடுத்து விடுவார். கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மனோதிடம், கடின உழைப்பின் மூலம் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள்.

- Advertisement -