சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள காகத்திற்கு இப்படி சாதம் வையுங்கள்.

sani-crow
- Advertisement -

பொதுவாக நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் ஒரு செயல் தான் காக்கைக்கு சாதம் வைப்பது. காக்கைக்கு சாதம் வைப்பது என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இந்த ஒரு சிறிய செயலில் எவ்வளவு ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டோம். காக்கைக்கு சாதம் வைத்தால் என்ன பலன். ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள் காக்கைக்கு எப்படி சாதத்தை வைத்தால், நமக்கு ஏற்படும் பாதிப்பானது குறையும் என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் காணப் போகின்றோம்.

crow feeding

பொதுவாக காகம் என்பது அந்த சனி பகவானின் வாகனம். காகத்தை நம் முன்னோர்கள் என்றும் கூட கூறுவார்கள். அதாவது நம் முன்னோர்கள் தான் காகத்தின் ரூபத்தில் வந்து நாம் வைக்கும் சாதத்தை எடுக்கின்றார்கள் என்றும். இதுவும் உண்மைதான். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

- Advertisement -

பொதுவாக ஏழரைச் சனியால் ஏற்படும் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மால் முழுமையாக தப்பித்துவிட முடியாது. ஆனால் அவரை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும். இதற்கு முதலில் வாரம்தோறும் சனிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவக்கிரகத்தை ஒன்பது முறை பிரதக்ஷிணம் செய்து அந்த சனி பகவானை மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். ‘நீ தரும் துன்பங்கள் அனைத்தும் என் வாழ்க்கையின் நலனுக்காகத்தான் என்று மனதார ஏற்றுக் கொள்கின்றேன்’. என்று கூறி வழிபடுவது நல்லது.

ஏழரைச் சனியின் பாதிப்பில் உள்ளவர்கள் முதலில் சனிபகவானை திட்டுவதை நிறுத்த வேண்டும். சனிபகவான் நமக்கு செய்யும் கெடுதல்கள் ஏதோ ஒரு வகை நன்மைக்காகத்தான் என்பதை முதலில் உணர வேண்டும். இதுவே முதல் பரிகாரம்.

- Advertisement -

அடுத்ததாக நம் வீட்டில் சனிக்கிழமைதோறும் வெள்ளை சாதத்துடன் எள் கலந்து காலை வேளையில் அந்த காகத்திற்கு வைக்க வேண்டும். காகத்திற்காக வைக்கப்படும் சாதத்தை  குளித்துவிட்டு தான் சமைக்க வேண்டும். பச்சரிசி சாதமாக இருந்தால் இன்னும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து சனி பகவானை மனதார வேண்டி எள் சாதத்தை கொண்டு காகத்திற்கு வைப்பது மிகவும் நல்லது. இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.

sani-baghavan

சனியின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மற்றொரு வழியும் உள்ளது. எவரொருவர் பொய் சொல்லாமல், நேர்மையாக வாழ்கிறாரோ அவர்கள் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ளலாம் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மை. ஏனென்றால் பிரச்சினைகள் ஏற்படும்போது பிரச்சனைக்காக பயந்தவர்கள் பொய் கூறினாலும் அல்லது பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள குறுக்கு வழியில் சென்றாலும் தான் பாதிப்புக்கள் அதிகமாகும். நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொண்டும், பிரச்சினை ஏற்பட்டாலும் நேர்வழியில் தான் செல்வேன் என்று செயல்பட்டு பாருங்கள், உங்களுக்கு பாதிப்பானது தானாகவே குறைந்துவிடும்.

- Advertisement -

சனிக்கிழமைகளில் எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது.

இதையும் படிக்கலாமே
கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா? தவறா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani bhagavan pariharam Tamil. Sani bhagavan valipadu Tamil. Sani bhagavan jothidam Tamil. Saniyin thakkam kuraiya Tamil.

- Advertisement -