சனி பகவானால் ஆயுசுக்கும் பிரச்சனை வராமல் இருக்க இதை மட்டும் செய்தாலே போதும். உங்களைத் தேடி வந்து அந்த சனி பகவானே கஷ்டத்தை தீர்த்து வைப்பார்.

sanibagavan
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டதை நிர்ணயிப்பது இந்த ஜாதக கட்டங்கள் தான். ஜாதக கட்டத்தில் இருக்கும் நவகிரகங்கள் தான் நம்முடைய தலையெழுத்து. எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் கிரகங்கள் தீமை மட்டுமே செய்யாது. அதே சமயம் எல்லா நேரத்திலும் எல்லோருக்குமே கிரகங்கள் நன்மையை மட்டுமே செய்து கொண்டிருக்காது. நன்மையும் தீமையும் கலந்ததே வாழ்க்கை. இதை உணர்த்துவதற்காக தான் கிரகங்கள் தங்களுடைய வேலைகளை அந்தந்த காலகட்டத்தில் செய்து வருகின்றது. கஷ்டம் வரும் சமயத்தில் ‘என் தலையெழுத்து ஏன் இப்படி இருக்கின்றது’ என்று உங்களை நீங்களே இனி திட்டிக் கொள்ளாதீர்கள்.

sani-temple-1

ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் அதிக கஷ்டம் வருவதற்கு முழு முதற்காரணமாக இருப்பது குரு பகவானும், சனி பகவானும் என்று கூட சொல்லலாம். குரு திசை நடக்கும் சமயத்தில் கட்டாயம் சில கஷ்டங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதேபோல்தான் ஏழரை சனி நடக்கும் போதும், சனி திசை நடக்கும் போதும் சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அதை நம்மால் தடுக்க முடியாது. இருப்பினும் அந்த கஷ்டங்களிலிருந்து சுலபமாக எப்படி வெளிவருவது என்பதைப் பற்றிய சில பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லிவைத்து தான் சென்றுள்ளார்கள்.

- Advertisement -

அந்த வரிசையில் உங்கள் ஜாதக கட்டத்தில் குரு பகவான் சரியாக இல்லை என்றால் என்ன பரிகாரத்தை செய்யலாம்? சனி பகவானால் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரத்தை செய்யலாம் என்று 2 முத்தான பரிகாரங்கள் இந்த பதிவில் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது.

guru-bhagavan

முதலில் குருபகவானால் பிரச்சனைகள் வராமலிருக்க குரு பகவானை சாந்தி செய்ய என்ன பரிகாரம் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். வியாழக்கிழமைகளில் மகான்களுடைய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சீரடி பாபா அவர்களுக்கு வியாழக்கிழமைதோறும் எலுமிச்சம்பழ சாதத்தை நிவேதனமாக வைத்து பூஜை செய்து, அந்த எலுமிச்சம்பழ சாதத்தை ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். தொடர்ந்து இந்த வழிபாட்டினை செய்து வந்தாலே போதும் குரு பகவான் நமக்கு வரங்களை வாரி வழங்குவார்.

- Advertisement -

அடுத்தபடியாக சனி பகவானால் பாதிப்பு உள்ளவர்கள், அஷ்டம சனி ஏழரை சனி இப்படி சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை வராமல் இருக்க, வெளியில் சென்று  வீட்டுக்குள் நுழையும் போது, வாசலிலேயே பின்னங்கால் நனையும்படி பாதங்களை நன்றாக கழுவி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும். வாரத்தில் ஒருநாள் நல்லெண்ணெய் தேய்த்து தலை ஸ்னானம் செய்து கொள்ள வேண்டும். நவகிரக சந்நிதியில் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

sanibagavan1

தேனி மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் சென்று சனிபகவானை முறைப்படி வழிபாடு செய்துவிட்டு வந்தால், சனிபகவானால் ஏற்படும் பிரச்சனைகள் வாழ்க்கையில் படிப்படியாக குறையும். சனி பகவானால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. முடிந்தவரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். குறிப்பாக பிரச்சினை என்று வந்தால் பொய் சொல்லி தப்பித்துக் கொள்ள கூடாது. உண்மையை சொல்லி மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. நேர்மையாக இருக்க வேண்டும். இவைகளை பின்பற்றி வந்தாலே போதும் வாழ்க்கை இனிமையாக மாறும்.

- Advertisement -