- Advertisement -

11-1-2025 சனி மகா பிரதோஷம் 2025

- Advertisement -

அட, மார்கழி மாதம் 26 ஆம் தேதி பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் 27ஆம் தேதி சிவனுக்கு உகந்த சனி மகா பிரதோஷம். என்னென்ன அற்புதம் வாய்ந்த நாட்கள் பார்த்தீர்களா. அதற்கு முந்தைய நாள், மார்கழி 25ஆம் தேதி முருகனுக்கு உகந்த கிருத்திகை. இப்படி வரிசையாக முருகர், பெருமாள், சிவன் என்று நமக்கு வரங்களை வாரி கொடுக்கக் கூடிய அற்புதம் வாய்ந்த நாட்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இறைவழிபாட்டை யாரும் தவற விடாதீர்கள். மனதிற்கு நிம்மதியையும், வாழ்க்கைக்கு மாற்றத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே வழி, ஆன்மீகம் மட்டும்தான். இதில் கிடைக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. ஆண்டு அனுபவித்து, பணம் சம்பாதித்து, கடனில் விழுந்து, செல்வத்தில் புரண்டு, கடைசியாக நாம் செல்லக்கூடிய இடம் இறைவனின் பாதம் தான்.

- Advertisement -

அந்த சிவபெருமானின் பாதம் தான். அந்த பெருமாளின் பாதம் தான்  ஆக எந்த அளவுக்கு வாழ்க்கை, சொத்து சுகம், பணம், பதவி, வேலை, இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே போல 100ல் ஒரு பங்காவது இறைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.

சனி மகா பிரதோஷ வழிபாடு

இந்த சனி மகா பிரதோஷம் மார்கழி 27ஆம் தேதி, ஆங்கில தேதியில் 11-1-2025 வரவிருக்கிறது. இந்த நாளில் சிவன் வழிபாடு அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும். எதுவுமே செய்ய முடியாதவர்கள் கூட “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி வீட்டிலேயே பூஜை அறையில் எம்பெருமானை வணங்குவது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டு பக்கத்தில் சிவபெருமான் கோவிலிருந்தால் அந்த ஆலயத்திற்கு சென்று வழக்கம் போல வில்வ இலைகளை வாங்கி கொடுத்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நந்தி தேவரை வணங்குங்கள். பிறகு சிவபெருமானை வணங்குங்கள். இந்த சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர்‌.

இவர் அபிஷேகத்திற்கு உங்களால் என்ன பொருட்கள் வாங்கி தர முடியுமோ, அதை வாங்கி கொடுக்கலாம் உங்கள் கஷ்டங்கள் தீரும். அதிலும் குறிப்பாக மூன்று அபிஷேக பொருட்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. என்னென்ன. அந்த பொருட்களை நாம் சிவபெருமானுக்கு எதற்காக வாங்கி தரப் போகின்றோம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து, அபிஷேகம் செய்தால் உங்கள் கடன் சுமை குறையும். சொந்த நிலம் வாங்குவதில், சொந்த வீடு வாங்குவதில் பிரச்சனை இருந்தால், அந்த பிரச்சனைகள் விலகும். வீடு சம்பந்தப்பட்ட, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக நார்த்தங்காய் அபிஷேகம் நந்தி தேவருக்கு செய்து வையுங்கள். வாடகை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது சரியாகும்.

வெண்தாமரைப் பூவை வாங்கி கொடுத்து எம்பெருமானை வழிபாடு செய்தால், உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. வெண்தாமரை கிடைப்பது அரிது என்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுக்கலாம். தவறு கிடையாது. கூடுமானவரை வென்றாமரைக்கு முயற்சி செய்யுங்கள். இன்றைக்கே பூ கடைக்காரரிடம் சொன்னால் நாளை மாலைக்குள் அந்த பூ உங்கள் கையை வந்து சேரும்.

இளநீர், அந்த சிவபெருமானை குளிர வைக்கக்கூடிய இந்த இளநீர் அபிஷேகம் மிக மிக சிறந்தது. வீட்டில் இருப்பவர்களுடைய வேலைவாய்ப்பு நன்றாக இருக்க வேண்டும் தொழில் வளம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் வாங்கி தர வேண்டும்.

உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்கவில்லை, கை நிறைய சம்பாதிக்கவில்லை, அல்லது பிள்ளைகள் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள், அவர்களுக்கு சுறுசுறுப்பு வந்து நல்லபடியாக வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்றாலும் இந்த இளநீரை நீங்கள் சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வழிபாடு

இதெல்லாம் விட, உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் அர்ச்சகரிடம் போய் கேளுங்கள். உங்களுக்கு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய எந்த பொருட்கள் தேவை என்று. அவர் அந்த கோவிலில் இல்லாத ஒரு சில பொருட்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுவார். அந்த பொருளை உங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொண்டு போய் கொடுப்பது மேலும் சிறப்பு வாய்ந்த பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான பரிகாரங்கள் எல்லா நன்மைகளையும் செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்