- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்

பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்

- Advertisement -

ஒவ்வொரு பிரதோஷமும் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் என்றாலும் சனி பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த முறை சனி மகா பிரதோஷம் ஐப்பசி மாதம் முதல் நாள் வருகிறது. மேலும் அன்றைய தினம் தந்தரஸ், தந்வந்திரி ஜெயந்தியும் கூட. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனி மஹா பிரதோஷம்

எப்படி பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறதோ அதேபோல் நந்தியம் பெருமானுக்கும் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் என்பது நடைபெறும். சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக நந்தி பகவானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நந்தி பகவானிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் நேரடியாக சிவபெருமானின் செவிகளில் போய் சேரும் என்றும் ஒரு நம்பிக்கையின் நிகழ்கிறது. பிரதோஷ நாளன்று நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையில் தான் சிவபெருமான் நடனம் ஆடினார் என்ற கூற்றும் உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்தி பகவானை சனி மகா பிரதோஷ நாளில் வழிபாடு செய்ய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஐப்பசி மாதத்தின் முதல் நாள் இந்த சிறப்பு மிகுந்த நாளில் அனைவரும் காலையிலிருந்து மாலை வரை விரதம் இருந்து சிவபெருமானின் மந்திரமான “சிவ சிவ” என்னும் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு மாலையில் வரக்கூடிய பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணிக்கு மேல் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று நந்தியம்பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் துபங்களை ஏற்றி வைத்து அருகம்புல்லை சமர்ப்பணம் செய்து அவருக்கு முன்பாக நான்கு மஞ்சள் நிற வாழைப்பழத்தை வைத்து உங்களுடைய வேண்டுதலை முழு மனதோடு கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படியே அங்கேயே அமர்ந்து அன்று நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளையும் பார்க்க வேண்டும். பிறகு இந்த வாழைப்பழத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக்கொண்டு ஆலயத்தில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு வாழைப்பழத்தை தங்கள் கைப்பட தானமாக தர வேண்டும். பிறகு ஆலயத்தில் தரக்கூடிய பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே நந்தியம் பெருமானின் சிலை படம் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வாழைப்பழத்தை வைத்து வழிபாடு செய்து விட்டு தாங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக தர வேண்டும். ஒருவேளை வீட்டில் நந்தி பகவானின் சிலையோ படமோ இல்லை என்னும் பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக வாழைப்பழத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்குரிய வழி உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:கண் திருஷ்டியை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

சிவபெருமானுக்கு என்று பலவிதமான பூதகணங்கள் இருந்தாலும் அந்த பூதங்களில் முதன்மையானவராகவும் சிவபெருமானின் தீவிர பக்தராவும் திகழக்கூடிய நந்தியம் பெருமானை வழிபாடு செய்து சகல பாவங்களும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்