- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனி மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சனி மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானுக்கு உகந்த வழிபாடுகளுள் மிகவும் முக்கியமான வழிபாடாக திகழ்வதுதான் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி என்பது வைகாசி மாதத்தின் கடைசி நாளான ஜூன் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தியை சனி மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட சனிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனி மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழக் கூடியவர் சனீஸ்வர பகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சனீஸ்வர பகவானுக்குரிய கிழமையான சனிக்கிழமை அன்று சங்கடகர சதுர்த்தி வரும் பொழுது நம்முடைய சங்கடங்கள் மட்டும் தீருவதோடு மட்டுமல்லாமல் சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஜூன் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 3:33 மணிக்கு ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:03 வரை சதுர்த்தி திதி என்பது இருக்கிறது. சதுர்த்தி வழிபாடு பொதுவாக மாலை நேரத்தில் தான் மேற்கொள்வோம் என்பதால் வழிபாட்டிற்கு உகந்த நாளாக சனிக்கிழமை திகழ்கிறது. அன்றைய நாளில் மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்துகொள்ள வேண்டும். அபிஷேகங்கள் அனைத்தும் நிறைவடைந்து கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு விநாயகப் பெருமானுக்கு நாம் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சரிசமமாக உடைத்து அதன் குடுப்பியை பிரித்துவிட்டு தேங்காயின் மேல் பகுதியில் 5 எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்து விநாயகருக்கு முன்பாக வைத்து விடுங்கள். பிறகு இதில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கவில்லை என்பவர்கள் சுத்தமான பசுநெய் ஊற்றி இந்த தீபத்தை ஏற்றலாம்.

- Advertisement -

பிறகு 21 அருகம்புல்லை எடுத்து அர்ச்சகரிடம் கொடுத்து தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தாரின் பெயரையும் நட்சத்திரத்தையும் கூறி விநாயகப் பெருமானுக்கு அந்த அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். இப்படி செய்து முடித்துவிட்டு அந்த ஆலயத்தில் நவகிரகங்கள் இருக்கும் பட்சத்தில் நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். நவகிரக வழிபாட்டை நிறைவு செய்த பிறகு திரும்பவும் விநாயகப் பெருமானின் முன்பாக வந்து நம்முடைய கஷ்டங்களும் சங்கடங்களும் தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொண்டு இரண்டு நிமிடம் அங்கேயே அமர்ந்து விட்டு பிறகு வீடு திரும்பி வரவேண்டும்.

அருகில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாது என்பவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு 21 அருகம்புல்லை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் போதும். தேங்காய் தீபம் ஏற்ற வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக

நவகிரகங்களை தன்னகத்தே கொண்ட விநாயகப் பெருமானை சனிக்கிழமையோடு வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று முழுமனதோடு இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையும் கஷ்டமும் காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்