- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக

தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக

- Advertisement -

ஒவ்வொரு பெண்களும் சக்தியின் அம்சம் கொண்டவர்களாக திகழப்படுகிறார்கள். எந்த ஒரு வீட்டில் பெண்கள் சந்தோஷமாக இருக்கிறார்களோ அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எந்த வீட்டில் பெண்கள் தீபமேற்றி வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு வழிபாட்டிற்கும் பெண்களுக்கும் அதீத சம்பந்தம் இருக்கிறது என்று கூறலாம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் பெண்கள் இந்த ஒரு வழிபாட்டை மேற்கொண்டால் போதும். எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அவை நீங்கி ஐஸ்வரியம் பெருக ஆரம்பிக்கும். அந்த பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருக

மகாலட்சுமியை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. செல்வ வளம் என்றால் அது பணம் மட்டும் கிடையாது. மகாலட்சுமி எட்டு ரூபங்களில் அஷ்டலஷ்மிகளாக திகழ்கிறார். ஒவ்வொரு லட்சுமியும் ஒவ்வொரு விதமான செல்வத்தை நமக்கு வாரி வழங்கக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். அதனால் நாம் மகாலட்சுமியை வழிபாடு செய்யும்பொழுது அஷ்ட ஐஸ்வரியமும் நம்மை வந்து சேரும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் பெறுவதற்கு பெண்கள் வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பூஜையை செய்ய வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு பெண்கள் புடவை அணிந்து மங்களகரமாக நெற்றியில் திலகமிட்டு பூக்கள் சூடி கைகளில் வளையலை அணிந்து கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் தீபம் ஏற்றுவதைப் போல ஏற்றுக் கொள்ளுங்கள். அனைத்து தெய்வத்திற்கும் மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்கள், தாமரைப்பூ, ரோஜா பூ போன்றவற்றை சாற்றலாம்.

மகாலட்சுமி தாயார் முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரியும் தாமரை தண்டு திரியும் இணைந்தவாறு போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருப்பது மிகவும் சிறப்பு. இந்த பூஜையை நாம் வெள்ளிக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில்தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாருக்கு பானகத்தை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியம் வைத்த பிறகு வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்தி “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு சந்தன ஊதுபத்தி ஆறு எண்ணிக்கையில் எடுத்து பொருத்தி அனைத்து தெய்வங்களுக்கும் காட்டிவிட வேண்டும். அதேபோல் சாம்பிராணி தூபத்தை வீடு முழுவதும் காட்ட வேண்டும். கடைசியாக கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது வீட்டில் இருக்கக் கூடிய தரித்திரமும் தோஷமும் படிப்படியாக விலகும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: வேண்டியதை தரும் வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

எளிமையான இந்த மகாலட்சுமி பூஜையை முழு மனதோடு வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்வதன் மூலம் அந்த குடும்பம் லட்சுமி கடாட்சத்துடன் சிறப்பாக இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்