சனி பகவான் கொடுக்கும் கடும் தொல்லைகள் நீங்க ஸ்ரீராமரை இங்கு வழிபடலாமே!

sani-ramar
- Advertisement -

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சனி பகவானுடைய தொல்லைகள் குறிப்பிட்ட காலம் வரை வந்து செல்லும். அக்காலகட்டத்தில் உண்மையிலேயே நமக்கு வரக்கூடிய பாதிப்புகள் போதும் போதும் என்கிற அளவிற்கு இருக்கும். இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பது பழமொழி. ஆனால் சனி தோஷம் இருப்பவர்களுக்கு இது சரியாகவே பொருந்தி விடுவது உண்டு. திடீரென கஷ்டமும், திடீரென தீராத துன்பமும் வந்து தொல்லை படுத்தும். சனி தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற ஸ்ரீ ராமரை இங்கு சென்று வழிபடலாம்! அதைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

devipattinam 1

ஒருமுறை ஸ்ரீ ராமர் சனி பகவானை வணங்குவதற்காக வேண்டி தேவிபட்டினம் என்கிற இடத்தில் நவகிரகங்களை உருவாக்க நினைத்தார். அங்கு இருக்கும் கடலில் இறங்கி மணலை எடுத்து நவகிரகங்களை உருவாக்க முயன்றார் அப்பொழுது அச்செயலை தடுப்பதற்கு கடல் அலையானது பொங்கி எழுந்து மணலைக் அழிக்க முயன்றது.

- Advertisement -

அந்த சமயத்தில் ஸ்ரீ ராமபிரான் கடல் கொந்தளிப்பை அமைதி செய்ய தன்னுடைய கைகளை உயர்த்தி பிடித்தார். உடனே ஆர்ப்பரிக்கும் கடல் அலை கொந்தளிப்பை நிறுத்தி விட்டு அமைதியானது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இதனை நிரூபிக்கும் வண்ணம் தேவிபட்டினம் என்கிற இடத்தில் கடல் அலைகள் ஆர்ப்பரிப்பது இல்லை. மிகவும் அமைதியாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது.

devipattinam 2

இதன் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீராமரை வழிபட்டால் சனி தோஷங்களும் பரிபூரணமாக நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இங்குள்ள ராமருக்கு கடல் அடைத்த பெருமாள் என்பது தான் பெயரே ஆகும்.

- Advertisement -

பொதுவாக சனி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபடுவது வழக்கம் ஆனால் கடல் அடைத்த பெருமாள் கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு சனி பகவானுடைய பாதிப்புகள் அத்தனையும் நீங்குவதாக நம்பப்பட்டு வருகிறது. எத்தகைய ராசிக்காரர்களும் எத்தகைய தோஷம் உள்ளவர்களும் நவகிரகங்களை வழிபடும் பொழுது துன்பங்கள் நீங்கும்.

devipattinam

அதிலும் சனி பகவான் கொடுக்கும் பாதிப்புகள் நீங்குவதற்கு இத்தகைய பிரசித்தி பெற்ற புராணம் கோவில்களுக்கு சென்று வழிபடும் பொழுது கூடுதல் பலன்கள் கிடைக்கும். சனி பகவான் உங்களைப் படாதபாடு படுத்தி எடுக்கிறார் என்றால் இந்த கோவிலுக்கு ஒரு முறை தவறாமல் சென்று வாருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.

- Advertisement -