சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – கும்பம்

கும்பம்
உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருந்து பல நன்மைகளை தந்த சனிபகவான், இந்த சனிப் பெயர்ச்சியில் 12-ம் இடமான மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பித்துள்ளது. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு சனி பகவான் வந்துள்ளார். பயப்படுவதற்கு எதுவுமில்லை. அதிகமான செலவுகள் ஏற்படும் காலமாக இது அமையும். உங்களுக்கு ஏற்படும் செலவுகளால் எந்த ஒரு ஆதாயமும் இருக்காது. வீண் விரயங்கள் ஏற்படும். உங்களது குடும்ப விஷயம் எதுவாக இருந்தாலும் மூன்றாவது நபரிடம் ஆலோசனை கேட்காதீர்கள். அது உங்களுக்கே பிரச்சனையாகி விடும். எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் நேர் வழியிலேயே சென்று சமாளித்துக் கொள்ளுங்கள். தீர்வு கிடைக்கும் என்று எண்ணி குறுக்கு வழியில் சென்றால் பாதிப்பு அதிகமாகிவிடும். அடுத்து உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. வீட்டில் இருக்கும் பெண்கள், குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

Kumbam Rasi

வேலை தேடுபவர்களுக்கு
புதிய வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளமும் கிடைத்துவிடும். ஆனால் அந்த வருமானத்தை வைத்து உபயோகமாக எதையும் உங்களால் செய்ய முடியாது. கையில் கிடைக்கும் சம்பளப் பணம் எந்த இடத்திற்கு சென்றது என்று நமக்கு தெரியாது. அந்த அளவிற்கு செலவு வந்து நிற்கும்.

வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு
உங்கள் வேலையின் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும். வெகுநாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் சிலருக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். உங்களின் சக ஊழியர்களுக்காக நீங்கள் பணம் ஏதும் செலவழித்தால் அந்தப் பணம் உங்களுக்கு திரும்பவும் வராது. உஷாராக இருப்பது நல்லது.

sani-baghavan

மாணவர்கள்
படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தாலும், நீங்கள் படித்ததை தேர்வில் மறந்து போக அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதிகாலையில் எழுந்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சக மாணவர்களிடம் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நன்மை தரும். பெற்றோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.

- Advertisement -

திருமணம்
சனிப் பெயர்ச்சிக்கு முன்பாகவே உங்களது திருமணமானது முடிவாகி இருந்தால் திருமணம் நடைபெறுவதில் எந்த ஒரு தடையும் ஏற்படாது. திருமணத்திற்காக புதிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டாம். பொறுமை காப்பது நன்மை தரும். புதியதாக சுபகாரியங்களை நடத்த தீர்மானித்தால் தடைகள் பல ஏற்பட்டு பிரச்சினையில் போய் முடிந்து விடும்.

Sani Baghavan

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
உங்களது தொழிலில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலை அப்படியே வழி நடத்தி செல்வது நல்லது. புதியதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் புதிய தொழில் தொடங்குவதற்கு கடன் வாங்க வேண்டியதிருக்கும். இந்த சமயத்தில் வாங்கப்படும் கடனை உங்களால் கண்டிப்பாக திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

kumbam

பரிகாரம்
உங்களால் முடிந்தால் தினம்தோறும் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், வாழைப்பழம் கொடுக்கலாம். தினம்தோறும் இப்படி செய்ய முடியாதவர்கள் வாரம் ஒருமுறையாவது இதை செய்து பாருங்கள். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மகரம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.