சனி பகவானால் நன்மை பெரும் ராசிகள்

sani luck
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையை திருப்பிப் போடும் அளவிற்கு கஷ்டங்களை தரக்கூடியவர் தான் சனீஸ்வர பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வர பகவான் நுழைந்துவிட்டால் அவரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏழரை ஆண்டுகள் மட்டும் அல்லாமல் வாழ்க்கை முழுவதுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வளவு பாதிப்புகளை தரக்கூடிய சனீஸ்வர பகவான் ஒரு சில ராசிகளுக்கு மட்டுமே அதிர்ஷ்டத்தை தருவார். அந்த அதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன என்று இந்த ஜோதிடம் குறித்த பதிவில் பார்ப்போம்.

ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி, கண்ட சனி, பாத சனி என்று பல பிரிவுகளாக சனீஸ்வர பகவான் ஒருவருடைய வாழ்க்கையில் பல துன்பங்களை கொடுத்து அதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை செம்மையாக நடப்பதற்கும், உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் எந்தெந்த பிரச்சினைகள் வரும், யார் உடன் இருப்பார்கள் என்ற நன்மை தீமைகள் அனைத்தையும் நமக்கு காட்டிவிடுவார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சனீஸ்வர பகவான் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அன்று வக்ர பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம் வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை இருக்கும். இதனால் 12 ராசிகளுக்கும் பாதிப்புகளை அவர் ஏற்படுத்துவார். அவரின் பயணம் மாறும்பொழுது சில ராசிகள் நல்ல பலன்களை அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி பார்ப்போம்.

ரிஷப ராசி

இதுவரை கஷ்டப்பட்டு உழைத்தும் அதனால் எந்த பலனும் இல்லை என்று வருத்தப்பட்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நல்ல பலன் கிடைக்கப் போகிறது. மேலும் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். தடைப்பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவிலேயே நல்லபடியாக நடந்தேறும். இவ்வளவு நன்மைகளை அவர் கொடுத்தாலும் பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசினால் தான் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.

- Advertisement -

மிதுன ராசி

சேமித்து வைத்திருந்த பணம் காலி ஆகி கையில் ஒன்றுமே இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்து சேரும். அதனால் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதற்குரிய வாய்ப்புகளும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம், வேலை, குடும்பம் என்று அனைத்து விஷயங்களிலும் எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னேற்றத்தையும் பெற முடியும்.

சிம்ம ராசி

எந்த பக்கம் போனாலும் தடைகளும், தடங்கல்களும் ஏற்பட்டு அதனால் முன்னேற்றம் என்பதே ஏற்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் வந்து சேரும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்க போகிறது. லாபம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாத நிலையில் இனிமேல் வியாபாரத்திலும், தொழிலிலும், சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் லாபங்கள் வந்து சேரும்.

- Advertisement -