சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – ரிஷபம்

Sani-peyarchi-palangal-rishabam

ரிஷபம்
Rishabam Rasi
கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டத்தை மட்டும் கொடுத்த சனிபகவான் இனி வரப்போகும் காலத்தில் நல்ல பலன்களை அள்ளி தரப்போகிறார். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருந்திருப்பீர்கள். தொழிலில் பல தோல்விகளை சந்தித்திருப்பீர்கள். இனி கவலையை விட்டுவிடுங்கள். வெற்றிப் படியை ஏறப் போகும் நேரம் வந்துவிட்டது. சில சங்கடங்கள் வந்தாலும் அதனால் எந்த பிரச்சனையும், பாதிப்பும் ஏற்படாமல் சமாளித்து விடுவீர்கள். உங்களின் உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம். உங்களுக்கு இனம்புரியாத ஒரு பயம் உங்கள் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதை பொருட்படுத்தாமல் தைரியமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். உங்கள் பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும்.

வேலை தேடுபவர்களுக்கு
இதுநாள் வரை வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல பலனாக உங்கள் மனதிற்கு பிடித்த, நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில் நல்ல வேலை கிடைக்கும். நீங்களே அந்த வேலையை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நமக்கு இவ்வளவு நல்ல வேலை கிடைத்திருக்கின்றதா என்ற ஆச்சரியம் உங்களுக்கே வந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு நல்ல வேலையை தான் சனிபகவான் உங்களுக்கு கொடுக்கப் போகிறார்.‌ ஆனால் உங்கள் வேலையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு
உங்கள் உடன் பணிபுரிபவர்களால் உங்களுக்கு சில பிரச்சனைகள் வந்து மறையும். பதவி உயர்வு வருவதற்கு வாய்ப்பு உண்டு.  அலுவலகத்தில் பிரச்சினைகள் வந்தாலும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருந்து கொள்ளுங்கள்.

Sani Astrology

மாணவர்களுக்கு
இதுவரை உங்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் எல்லாம் விலகிவிடும். நல்ல ஆர்வத்தோடு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சனி பார்வை உங்களை விட்டு விலகி விட்டது. உங்கள் ஞாபக சக்தியானது அதிகரிக்கும். இதுவரை கண்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமென்று நினைப்பீர்கள். தேர்வு சமயங்களில் பயம் இல்லாமல் எழுதுங்கள். தேவையில்லாத நட்பை தவிர்த்துவிடுங்கள்.

திருமணம்
திருமணப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் சமயத்தில் சில தடங்கல்கள் ஏற்பட்டு பின்பு தடைகள் மறைந்து திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணத்திற்காக நீங்கள் எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஏதாவது சிறுசிறு பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Sani Baghavan

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
கடந்த இரண்டு வருடங்களாக பெரிய நஷ்டத்தை மட்டுமே சந்தித்து இருந்த உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. ஏதாவது ஒரு புதிய தொழில் தொடங்குவதற்காக புதிய முயற்சிகளை எடுத்து, மற்றவர்களை அணுகி நீங்கள் பேசினால், உங்கள் பேச்சுத்திறமையினாலேயே அந்த காண்ட்ராக்ட்டை பிடித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களது பேச்சாற்றல் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உங்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் செய்யும் தொழிலானது பங்குதாரர்களுடன் சேர்ந்து செய்யும் தொழிலாக இருந்தால் உங்களின் பங்குதாரர்களால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

rishabam

பரிகாரம்
குலதெய்வ வழிபாடு அவசியம். வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நன்மையை தரும். வயதில் முதிர்ந்த பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – மேஷம்

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.