சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – துலாம்

Sani-peyarchi-palangal-thulam

துலாம்
Thulam Rasi
உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்த சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக அமோகமான பலனை அள்ளி கொடுத்திருப்பார். ஆனால் இந்த சனிப்பெயர்ச்சியில் 4ம் இடத்திற்கு இடம் பெறப் போகிறார். இதுநாள் வரை நல்லதை மட்டுமே தந்த சனிபகவான் இந்த சனிப் பெயர்ச்சியில் சில சங்கடங்களை தரப்போகிறார். ஆனால் பயம் ஏதும் இல்லை. உண்டாகும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் பக்குவத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உங்களது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது அக்கறை காட்ட வேண்டும். உடல் உபாதைகள் ஏற்படும் ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது. சுறுசுறுப்பாக செயல்படாமல் மந்தமான சூழ்நிலை இருப்பது போன்று காணப்படும். சோம்பேறித்தனத்தால் சில தோல்விகளை சந்திப்பீர்கள். பயணத்தில் அதிக கவனம் தேவை. கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உங்களது குழந்தைகளை கவனமாக கண்காணித்து வாருங்கள். அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு
சனியின் பார்வை 10-ம் இடத்தில் உள்ளது. வேலையை முழு முயற்சியுடன் தேடவேண்டும். நல்ல வேலை கிடைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியுடனும், அதிக ஈடுபாடுடனும் செயல்பட்டால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். ‘ஏதோ ஒரு வேலை கிடைத்துவிட்டது. வேலைக்கு செல்வதும் வருவதுமாக இருந்தால்’ பிரச்சனைகள் அதிகமாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும். கிடைத்த வேலையை மனதார ஏற்றுக்கொண்டு உழைத்தால் மட்டுமே வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

sani-baghavan

வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு
உங்களது வேலையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. அலுவலகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சனையில் இருந்து போராடி எப்படி வெளிவர முடியும் என்று நினைத்து உழைக்க வேண்டும். ‘பிரச்சனை அதிகமாக இருக்கிறது  வேலையை விட வேண்டும்’, என்று ஒரு நொடி கூட யோசிக்க வேண்டாம். இந்த சமயத்தில் வேலையை விட்டு விட்டால் நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம். கடுமையாக உழைக்க பயந்துகொண்டு பின்வாங்கினால் வேலை பரிபோக்கிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மாணவர்கள்
மாணவர்கள் அன்றைக்கு உண்டான பாடங்களை அன்றைக்கே படித்து முடித்து விடுங்கள். நாளை படித்துக் கொள்ளலாம் என நினைப்பது நல்லது அல்ல. இன்றைக்கு நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டாமல் சோம்பேறித்தனமாக இருந்தால் பின்விளைவுகள் அதிகமாகிவிடும். தேவையில்லாத மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் படிப்பில் முழுக் கவனத்தோடு படித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

திருமணம்
திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒரு வருடத்திற்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். இதுநாள் வரை இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். உங்கள் வீட்டில் எந்த விதமான தடங்கல்களும் இல்லாமல் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

sani-baghavan

சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
பத்தாமிடத்தில் சனி பார்வை இருந்தாலும், குரு பகவான் 9-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிப்பினால் வரும் சங்கடங்கள் குறையும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களது பங்குதாரர்களிடம் உஷாராக இருப்பது நல்லது. முடிந்த வரை உங்களது தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளவும். கடன் வாங்குவது அவசியம் என்றால் கடன் வாங்கிய தொகையை தொழிலுக்கு மட்டும் முதலீடு செய்ய வேண்டும்.

thulam

பரிகாரம்
உங்களால் முடிந்தவரை ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்கு சென்று வில்வ இலையால் அர்ச்சனை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – கன்னி

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.