சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – கன்னி

Sani-peyarchi-palangal-kanni

கன்னி
Kanni Rasi
உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருந்த சனிபகவான், வரும் சனி பெயர்ச்சியில் 5ஆம் இடத்திற்கு செல்லப் போகின்றார். இது நாள் வரை உங்களது வாழ்க்கையில் சந்தோஷத்தை வரவிடாமல் தடுத்து கொண்டிருந்தார் சனி பகவான். மனதளவிலும், உடலளவிலும் பல சங்கடங்களை நீங்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கான சங்கடங்கள் நீங்க போகிறது. முழுமையாக நீங்கிவிடும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். கடந்த 3 வருடங்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கும். சந்தோஷங்கள் அதிகரித்து, கஷ்டங்கள் அவ்வப்போது வந்து போகும். உங்களது வருமானத்தை விட, செலவு ஒரு படி மேலே இருக்கும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்து கவனம் செலுத்தி, ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று விட்டால் பெரிய பாதிப்புகள் வராது. குடும்பத்தில் அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.

வேலை தேடுபவர்களுக்கு
வேலை இல்லாமல் நீங்கள் கஷ்டப்பட்டவர்கள் என்றால் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நிச்சயம் நல்ல வேலையை தந்துவிடும். உங்கள் மனதிற்குப் பிடித்த வேலை அமையும். ஆர்வத்தோடு புதிய வேலையில் ஈடுபாடு காட்டுபவர்களுக்கு நல்ல பெயர், நல்ல ஊதியம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

வேலைக்கு செல்பவர்களுக்கு
வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் கடந்த சில வருடங்களாக நீங்கள் செய்யாத தவறுக்கு கூட உங்களுக்கு கெட்டபெயர் வந்திருக்கும். நீங்கள் செய்த நல்லதாக இருந்தாலும் அதற்கும் கெட்ட பெயர்தான் வந்திருக்கும். பல கஷ்டங்களை அனுபவித்து தலைகுனிந்த உங்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது. உங்கள் மீது இருந்த அவப்பெயர் நீங்கி தலைநிமிர்ந்து நடக்க கூடிய காலம் வந்துவிட்டது. இனி வரப்போகும் காலத்தில் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நிம்மதி அடையலாம்.

Sani baghavan

மாணவர்கள்
உங்கள் கவனத்தை மற்ற விஷயங்களில் செலுத்தாமல் படிப்பை மட்டும் ஆர்வத்தோடு படிக்க வேண்டும். அதிக முயற்சி எடுத்து படித்தால் தான் வெற்றி கிடைக்கும். இப்போது சோம்பேறி தனத்தோடு செயல்பட்டால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை மறக்காமல் உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். படிப்பதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் வெளிப்படையாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ கூறுவது நல்லது.

திருமணம்
திருமணத்தில் இருந்த தடையானது நீங்கி சுப செய்தி வந்து சேரும். ஆனால் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். அவசரமாக எடுக்கும் முடிவில் குழப்பத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விடும். திருமணம் நடந்து குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

- Advertisement -

sani-baghavan

சொந்தத்தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு
சனி பகவானால் ஏற்படக்கூடிய சிறு சிறு பாதிப்புகளை உங்கள் ராசிக்கு குரு பகவான் சரி செய்யப்போகிறார். தொழிலிலும் வியாபாரத்திலும் தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து சுலபமாக வெளிவந்து நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இதுநாள் வரை உங்களுக்கு இருந்த நஷ்டங்கள் லாபமாக மாறும். அதிக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் அதிக நஷ்டம் ஏற்படாது. புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். நாம் வெற்றி இலக்கை நோக்கி செல்லும் போது தான் கவனம் அதிகம் தேவைப்படும். உங்களது பேச்சினை உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியப்பேச்சு வேண்டாம். கர்வப் பேச்சும் வேண்டாம். யாருக்கும் வாக்கையும் கொடுக்க வேண்டாம்.

பரிகாரம்
வாரம்தோறும் கோவிலுக்கு சென்று குரு பகவானை வணங்கி, கொண்டைக்கடலை மாலை செலுத்தி, முடிந்தால் எலுமிச்சை சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – சிம்மம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sani peyarchi 2020. Sani peyarchi palan Tamil. Sani peyarchi palangal. Sani peyarchi parigaaram.