வரப்போகும் மார்ச் மாதம் 2025 ஆம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சி நிகழவிருக்கிறது. சரியாக சொல்லப்போனால் மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சியை கண்டு நிறைய பேர் அப்படியே பயந்து நடுங்குகிறார்கள். இன்னும் சில ஜோதிடர்கள் எல்லாம், மீன ராசியில் பல கிரகங்கள் ஒன்றாக சேரவிருக்கிறது.
இதுபோல கிரக சேர்க்கை 12 ராசிகளுக்கும் விளைவுகளை உண்டு பண்ணிவிடும் என்ற கருத்துக்களை எல்லாம் முன்வைக்கிறார்கள். இதைக் கண்டு நம்மில் நிறைய பேருக்கு பயம் இருக்கும். நம்முடைய தலையெழுத்து எப்படி இருக்கிறது தெரியவில்லை. அந்த கடவுளுக்கு தான் தெரியும். எதை நினைத்தும் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
பொறுப்பை அந்த கடவுளிடமே ஒப்படைத்து விடுவோம். சனிபகவானால் எந்த தாக்கங்களும் வரக்கூடாது. மீன ராசியில் நடக்கவிருக்கும் கிரக சேர்க்கையின் மூலம் நமக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றால் இந்த விநாயகர் வழிபாட்டை செய்வது மட்டும்தான் ஒரே வழி.
தினமும் காலையில் எழுந்தவுடன் “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை ஒரு முறை சொல்லி விடுங்கள். பல் தேய்க்கவில்லை, குளிக்கல எதுவுமே பார்க்க வேண்டாம். எழுந்து உட்கார்ந்தவுடன் மனதிற்குள் விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி அன்றாட வேலையை துவங்குங்கள். வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ, புதன்கிழமையோ, வெள்ளிக்கிழமையோ உங்கள் விருப்பம் தான்.
இரண்டு அருகம்புல்லை கொண்டு போய் விநாயகர் கோவிலில் கொடுங்கள். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகருக்கு உங்கள் கையால் அருகம்புல்லை வைத்துவிட்டு சென்றாலும் தவறு கிடையாது எல்லா தெருமுனைகளிலும் நிச்சயம் ஒரு பிள்ளையாக இருப்பார். முடியவில்லையா வீட்டில் இருக்கும் விநாயகர் தலையில் 2 அருகம்புல், பாதத்தில் 2 அருகம்புல் வைத்துவிட்டு கனநாதா நீதான் என்னை காக்க வேண்டும் என்று விநாயகர் பாதத்தில் விழுந்து, உங்கள் நாளை துவங்குங்கள். வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இதுதான் முதல் வழி.
இதுபோக மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி வரும். ஒரு தேங்காயை வாங்கிக் கொண்டு போய், விநாயகர்கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து விடுங்கள். இந்த வருடம் முழுவதும் விநாயகரை நீங்கள் எந்த அளவுக்கு இருக்க பற்றிக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு பிரச்சனைகள் தளரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை பல ஜோதிடர்கள், பலமுறை வலியுறுத்தி சொல்லி வைத்துள்ளார்கள். ஆகவே இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை சுமூகமாக செல்ல வேண்டும் என்றால் விநாயகர் வழிபாடு மட்டுமே சிறந்தது.
இதையும் படிக்கலாமே: தைப்பூச விரத மந்திரம்
எதுவுமே தெரியாமல், வாழ்க்கையே இருட்டில் போய் சிக்கிக் கொண்டாலும் சரி, அந்த நேரத்தில் விநாயகரை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அந்த இருளானது உடனடியாக நீங்கும். அந்த பிரச்சனையில் இருந்து தானாக நீங்கள் விலகி வெளியே வந்து விடுவீர்கள். இது மிக எளிமையான வழிபாடு தான். எல்லோருக்கும் தெரிந்த வழிபாடு தான். ஆனால் எத்தனை பேர் செய்கின்றோம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த வருடம் விநாயகர் வழிபாட்டை தவற விடாதீர்கள், நல்லது நடக்க விநாயகர் உங்களுக்கு உதவி செய்வார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.