சனிப்பெயர்ச்சி 2020: அதிர்ஷ்டம் பெறவிருக்கும் டாப் 5 ராசிகள்.

sani

சனிப்பெயர்ச்சி 2020:
வரவிருக்கும் விகாரி வருடம் ஜனவரி 24ஆம் தேதி 2020 இல் பெயர்ச்சியாக போகும் சனி பகவான் எந்தெந்த ராசிகளுக்கு ராஜபோக யோகத்தை அள்ளித்தர போகிறார்? என்பதை தான் இப்பதிவில் நாம் இப்போது விரிவாக காணப் போகின்றோம். 2020 ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தனுசு ராசியிலிருந்து சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மகர ராசியில் இரண்டரை வருடம் ஆட்சி செய்ய இருக்கிறார். சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். இந்த சனி பெயர்ச்சியானது எந்த டாப் 5 ராசிகளுக்கு யோகம் அளிக்கக்கூடியது என்று பார்க்கலாம்.

Sani Bagavan

விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தான் இந்த சனிப்பெயர்ச்சி முதல் யோகத்தை அள்ளிக் கொடுக்க போகிறது. ஏழரை வருடம் சனியின் பிடியிலிருந்த நீங்கள் அதிலிருந்து தற்போது விடுபட இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு தான் சனி பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது. நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் உங்களைத் தேடி பணமழை கொட்ட போகிறது. இந்த யோகத்தை பயன்படுத்தி நீங்கள் முன்னேறினால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல இடத்திற்கு சென்று விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திடீர் திடீரென பல அற்புதங்கள் உங்கள் வாழ்வில் இனி நடக்க இருக்கிறது.

இந்த ஏழரை வருட காலமாக நீங்கள் படாதபாடு பட்டிருப்பீர்கள். என்னடா இது வாழ்க்கை? என்கிற மனநிலைக்கு வந்திருப்பீர்கள். இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கின்ற அளவிற்கு உங்களது நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதற்குரிய பலன் உங்களுக்கு கிடைத்திருக்காது. எல்லாவற்றிலும் தோல்வி, எல்லாவற்றிலும் சரிவு என பல இன்னல்களை அனுபவித்து இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்து, போதும் இந்த வாழ்க்கை என்கிற நிலைமையில் இருப்பீர்கள். உங்களின் அனைத்து பிரச்சனைகளும் இனி நிவர்த்தியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, குடும்பத்தில் அமைதி என்று இனிமேல் நிம்மதி பெருமூச்சு விட போகிறீர்கள்.

elarai-sani

தனுசு ராசி:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது நல்ல பலன்களை கொடுக்கவிருக்கிறது. இப்படி சொன்னதும் தனுசு ராசிகாரர்களுக்கு வியப்பாக இருக்கிறதா? ஏனென்றால் உங்களது ராசியில் இருந்த சனி தற்போது மகர ராசிக்கு சென்றாலும் அவரது பார்வை உங்கள் மீது பதிகிறது. அப்படி இருக்கும் பொழுது எப்படி நல்ல பலன்களை கொடுக்க முடியும் என்று நீங்கள் சிந்திக்கலாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருந்த அனைத்து பிரச்சினைகளும் உங்களுக்கும் இருந்திருக்கும். வாழ்க்கையை வெறுத்துப் போய் இருப்பீர்கள். தனுசு ராசிக்கு ஐந்தரை வருட கால ஜென்ம சனி முடிந்து இரண்டரை வருட கால பாதசனி தொடங்குகிறது. ஜென்ம சனி முடியும் காலத்தில் சில நல்ல காரியங்கள், அதிர்ஷ்டங்கள் பொதுவாக ஏற்படும் என்பார்கள். உங்கள் ராசியில் குரு பகவான் ஏற்கனவே இருக்கிறார். குருவிற்கு ஆட்சி வீடு தனுசு ராசி தான். தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான் நன்மையே அளிப்பார்.

- Advertisement -

Sani baghavan

குரு பகவானுக்கு தனுசு ராசி ஆட்சி வீடு என்பதுபோல் சனி பகவானுக்கு மகர ராசி ஆட்சி வீடு ஆகும். சனி பகவான் சொந்த வீட்டிற்கு பெயர்ச்சியாவதால் எல்லா ராசிக்காரர்களுக்கும் ஓரளவு நன்மையைத் தான் செய்வார். மேலும் இவ்விரு ராசிகளும் தத்தம் ஆட்சி வீட்டில் அமர இருப்பதால் இது ஒரு நல்ல சாதகமான சூழ்நிலையாக இருக்க இருக்கும். டிசம்பரில் நடக்கும் டிசம்பரில் 6 கிரகங்களும் தனுசு ராசியில் சந்திக்க இருப்பதால் தனுசுராசிக்கு இது நல்ல யோகமான காலம் ஆகும் இதுவரை இருந்த அனைத்து கஷ்டங்களும் தீரும் வாழ்வில் நல்லதொரு மாற்றம் நிகழ இருக்கிறது. பிரச்சனைக்குரிய ராசிக்காரர்கள் எப்பொழுதும் தேவையற்ற பிரச்சனைகளை, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும். எப்பொழுதும் சிந்தித்து, நல்லதே நினைத்து, இனிமையான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும். இதனால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Astrology Sani

சிம்மம்:
இந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல யோக காலம் தான் என்று கூற வேண்டும். எதிர்பாராத பண வரவு இருக்கும். உங்களிடம் இருக்கும் திறமையால் நீங்கள் முன்னேறுவதை விட உங்கள் மூலம் உங்களுக்கு கீழ் இருக்கும் சிலர் சுலபமாக முன்னேறி விடுவார்கள். நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று கூறினாலும் கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்ட மழை பெய்ய இருக்கிறது. இனிமேல் உங்களுக்கு எப்போதும் நல்ல காலம் தான். சுப காரியங்களை முன்னின்று நடத்தி வைக்கும் அளவிற்கு உங்களது வாழ்க்கை நல்ல இடத்திற்கு போகும். நல்லதை நினைத்து நல்லதையே செய்யுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.

Sani Astrology

ரிஷபம் மற்றும் மீனம்:
இவ்விரு ராசிக்காரர்களுக்கும் சென்ற குரு பெயர்ச்சி ஆனது பல நல்ல பலன்களை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது போல் இந்த சனிப் பெயர்ச்சியானதும் அதைவிட பல மடங்கு பலன்களை உங்களுக்கு தர இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் இதுவரை காணக்கிடைக்காத பல நல்ல விஷயங்களை இனிமேல் காணப்போகிறீர்கள். நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இனிமேல் கைமேல் பலன் கிடைக்க இருக்கிறது.

இதையும் படிக்கலாமே
சுக்கிரன் பெயர்ச்சி 2019 – 15.12.2019 முதல் 09.01.2020 முதல் வரை

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.