ஜனவரி 17 2023 – சனிப்பெயர்ச்சியால் யோகம் பெற போகும் ராசிகள் யாரெல்லாம்? இதுவரை இருந்து வந்த தலைவிதி மாறப்போகிறதா?

sani-el-deepam
- Advertisement -

2023 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் பல கிரக மாற்றங்கள் நடைபெற இருக்கிறது. இந்த கிரக மாற்றங்களால் பலருடைய வாழ்க்கையில் தலைவிதியும் மாறப் போகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இதுவரை துன்பங்களை சந்தித்து வந்தவர்கள், இனி வசந்த காலத்தை வரவேற்க ஆயத்தமாகலாம். அந்த வகையில் ஜனவரி 17ஆம் தேதி ஜோதிடத்தில் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் சனி பகவான் இடம்பெயர இருக்கிறார். இதனால் யாருடைய தலைவிதி எல்லாம் மாறப்போகிறது? என்பதை தான் இந்த ஜோதிட குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

மேஷம்:
மேஷ ராசியில் இருந்து 11வது ராசியாக இருக்கக்கூடிய கும்ப ராசிக்கு சனி பகவான் பத்தாம் இடமான மகரத்தில் இருந்து இடம்பெயர இருக்கிறார். இதனால் உங்கள் ராசிக்கு இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த தொழில் இனி சூடுபிடிக்க துவங்கப் போகிறது. தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், சாதகமான பலன்களையும் கொடுக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும், இதனால் மேஷ ராசிக்காரர்களின் நிதிநிலை உயர துவங்கும் என்பதில் மாற்றமில்லை.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் இருந்து பத்தாம் இடமாக இருக்கக்கூடிய கும்பத்திற்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து இடம்பெயர இருப்பதால் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்று நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பத்தில் நடக்கும் இந்த பெயர்ச்சி சச மகா புருஷ யோகத்தை கொடுக்கிறது என்பதால் உங்கள் ராசிக்கு மாபெரும் அதிர்ஷ்டங்களை வழங்க உள்ளார். உங்கள் புண்ணிய பலன்கள் அடிப்படையில் இனி முடங்கி இருந்த உங்களுடைய பணிகள் வெற்றிகளை அடைய இருக்கிறது. இடையில் நின்று போயிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும்.

கன்னி:
கன்னி ராசியில் இருந்து சனி பெயரும் இடமானது உங்கள் ராசிக்கு யோகங்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுப பலன்களை பெறவிருக்கும் ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்றாக இருக்கிறது. இதுவரை நோய் நொடிகளால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து முன்னேற்றம் காண இருக்கிறீர்கள். நீண்ட கால அவஸ்தைகள் யாவும் முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விருத்தி உண்டாகும். வேலை கிடைக்காமல் அல்லல்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைந்து செட்டில் ஆகிவிடுவீர்கள்.

- Advertisement -

மகரம்:
உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டிருந்த சனி பகவான் ராசியில் இருந்து இரண்டாவது ராசிக்கு இடம் பெயர்வதால் ராஜ யோகத்தை கொடுக்க இருக்கிறார். கையில் கரைந்து கொண்டிருந்த பணத்தை இனி இழுத்துப் பிடித்து சேமிக்க ஆரம்பித்து விடுவீர்கள். இதனால் உங்களுடைய பொருளாதார படிப்படியாக உயர தொடங்கும். குடும்பம், கணவன் மனைவி உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் நீங்கி புதிதாக புரிதல் உருவாகி அன்னோன்யம் கூடும்.

இதையும் படிக்கலாமே:
நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களை ஆட்டி படைக்க இருக்கிறது? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

இந்த சச மகா புருஷ யோகம் அனைத்து ராசிகளுக்கும் நற்பலன்களை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை ராசிக்காரர்களும் விதி வாசத்தால் அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளில் இருந்து விடுதலை அடைய இருக்கிறீர்கள். சுப மற்றும் அசுப பலன்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி அன்று சனி பகவானுக்கு உரிய வழிபாடுகளை செய்து சனிபகவானுடைய அருளை பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களை சவாலாக நினைத்து பொறுமையுடன் வெற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -