இன்று சனி பிரதோஷம் இந்த ஒரு நாள் மட்டும் சிவாலயத்திற்கு சென்று வந்தால் போதும் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியங்கள் உங்களை வந்தடையும்.

pradhosham
- Advertisement -

சிவனை வணங்குவதற்கான உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானதாக சனி பிரதோஷம் கருதப்படுகிறது. சனிப்பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து சிவனை வழிபட்டு வந்தால் எவ்வளவு பெரிய மலையளவு துன்பமாக இருந்தாலும் அது கடுகளவு சிறிய பிரச்சனையாக மாறி காணாமல் போய்விடும். அவ்வாறான சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷ நாளின் சிறப்புகளை பற்றியும், பிரதோஷ விரதத்தின் பலன்கள் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sivan

உலகைக் காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு கொடுத்து தீமை தரக்கூடிய கொடிய விஷத்தை அருந்தியவர் சிவபெருமான். இவ்வாறு உலகைக் காத்த உத்தமரான சிவபெருமானை வழிபடுவதற்காகன சிறந்த நாளே பிரதோஷமாகும்.

- Advertisement -

11-ம் திதியாகிய ஏகாதேசி அன்று சிவபெருமான் விஷம் அருந்தினார்.12-ம் திதியாகிய துவாதிசியில் மீண்டும் காட்சி அளித்தார்.13-ம் திதி ஆகிய திரயோதசி அன்று மாலை பிரதோஷ காலத்தில் நடனம் ஆடி தரிசனம் கொடுத்தார். சிவபெருமான் சனிக்கிழமை தினத்தன்று தான் விஷம் அருந்தினார். எனவே சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

sani-baghavan

நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகசனி இவ்வாறான நாட்களில் நமக்கு பலன் கொடுத்துக்கொண்டிருக்கும் சனி பகவானின் கோபம் தீர சனி பிரதோஷ வழிபாட்டை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிவனே வணங்குபவர்களை சனி பகவான் எப்போதும் பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கவே நினைப்பார்.

- Advertisement -

சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தன்று பார்வதியுடன் இருக்கும் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் மூன்று முறை ஆலயத்தை வலம் வருவதை காண முடியும். முதல் சுற்றில் வேதபாராயணம் பாடப்படும். இரண்டாம் சுற்றில் திருமுறை பாராயணம் பாடப்படும். மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசை வாசிக்கப்படும். இவ்வாறு சிவபெருமானுடன் சேர்ந்து மூன்று சுற்றுகள் கோவிலை வலம் வந்து, இந்த மூன்று பாராயணங்களையும் கேட்டு வருவதன் மூலம் கோடான கோடி புண்ணியங்கள் நம்மை வந்தடையும்.

kovil

பிரதோஷ நாட்களில் சிவனுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்படும். அந்த அபிஷேக பூஜைகளுக்காக தேவைப்படும் மங்கள பொருட்களான சந்தனம், குங்குமம், மஞ்சள், திருநீர், பன்னீர், பால், தேன், பழங்கள் இவ்வாறான பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ தினத்தன்று காலை எழுந்தவுடன் நன்றாக குளித்துவிட்டு, திருமநீர் பொட்டு வைத்துக் கொண்டு, சிவ நாமமான “ஓம் நமசிவாயா” என்று சொல்லி சிவனை வணங்கி, அன்று காலை முதல் மாலை வரை உணவை தவிர்த்து, பிரதோஷம் முடிந்தவுடன் பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு பதினோரு பிரதோஷங்கள் விரதமிருந்து சிவனை வழிபட்டு வந்தால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வளமான வாழ்க்கை கிடைக்கும்.

manjal1

பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜைகள் அனைத்தையும் ஆரம்பம் முதல் இறுதிவரை தவறாமல் கண்குளிர கண்டு சிவபெருமானை மனமுருக வேண்டிக் கொண்டால் நாம் நினைத்த அத்தனை காரியங்களையும் சிவபெருமான் நிச்சயம் நடத்திக் கொடுப்பார்.

- Advertisement -