சனி பிரதோஷம்(18/9/2021) அன்று சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி என்பதே இருக்காதாம்! துன்பம் நீங்கி இன்பம் பெருக இந்த நாளை தவறவிடாதீர்கள்.

lingam-sivan
- Advertisement -

பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு. அந்த வகையில் வருகின்ற 18ஆம் தேதி சனிக்கிழமை சனி பிரதோஷ சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி எடுக்காத அளவிற்கு நமக்கு முக்தி கிடைக்குமாம். அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

sivan

சனி மஹா பிரதோஷத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு எல்லை இல்லாத இன்பம் வந்து சேரும். தெரிந்தோ, தெரியாமலோ சிவபெருமானை தரிசனம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்து விடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறது சிவபுராணம். அப்படியிருக்க ஒவ்வொரு சனி பிரதோஷம் அன்றும் நாம் முறையாக சிவனை வழிபட என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

- Advertisement -

தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. ரெட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் இந்த சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் சிவபெருமான் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

nandhi

அபிஷேக் அப்பொருளை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அன்றைய நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பான விசேஷ பூஜைகள் நடைபெறும். நந்தி பகவானுக்கு பிரதோஷ காலத்தில் அருகம்புல், வில்வ இலை மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய பிரார்த்தனைகள் எத்தகையதாக இருந்தாலும் அவைகள் உடனே தடையின்றி நடக்கும்.

- Advertisement -

மேலும் சாதாரண நாள் போல் பிரதக்ஷணம் செய்யாமல் சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்ளுங்கள். சோமசூக்த பிரதட்சணம் என்பது நந்தி பகவானை வணங்கி விட்டு பின்னர் சிவனுக்கு அபிஷேகம் செய்த நீர் வெளியில் செல்லும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடம் வரை சென்று வழிபட வேண்டும். பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் திரும்பவும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடத்திற்கு சென்று வணங்க வேண்டும். இப்படி சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை பிரதோஷ பிரதக்ஷணம் என்றும் அழைப்பது உண்டு. இந்த வரிசையில் 20 வகையான பிரதோஷங்கள் இருக்கின்றன.

sivan

சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலத்தில் அடுத்த பிறவி இல்லாமல் இப்பிறவியே போதும் என்று நினைப்பவர்கள் தான, தர்மங்களை செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்வது இரட்டிப்பான பலன்களை கொடுக்கும். வீட்டிலும், கோவிலிலும் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து குளிர்விக்க வேண்டும். ஆலயத்தின் சன்னிதி திரையிட்ட நேரத்தில் வேறு எங்கும் செல்லாமல் இறைவனை நினைந்து சிவஸ்தோத்திரம் உச்சரிக்க வேண்டும். நாலரை மணி முதல் ஆறு மணி வரை சிவன் கோவில்களில் அமர்ந்து சிவனை நினைந்து மனதார வழிபட்டு வருபவர்களுக்கு வேண்டிய வரம் வேண்டியபடி நிச்சயம் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- Advertisement -