உங்களின் கிரக தோஷம்,நோய்கள் மற்றும் ஆபத்துகள் நீங்க செய்யும் சுலோகம் இதோ

sani-baghavan-1

ஜோதிடம் மற்றும் குறிப்பிட்ட வருடங்களில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளில் சனி கிரக பெயர்ச்சி மட்டும் அதிக மக்களால் மிகுந்த ஆர்வத்தோடு கவனிக்கப்படுகிறது. ஏனெனில் “சனி பகவானை போல் கெடுப்பாரும் இல்லை, சனி பகவானை போல் கொடுப்பாரும் இல்லை” என்கிற அனுபவ பழமொழியே அதற்கு காரணமாகும். அத்தகைய சனி பகவானின் இந்த “சனி ஸ்லோகம்” துதிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Sani Baghavan

சனி ஸ்லோகம்

நீலாம்பரோ நீலவபு கிரீடி க்ருத்ரஸ்தித
சத்ராஸக ரோ தநுஷ்மான் சதுர்புஜ ஸுர்யஸு
ப்ரசாந்த ஸதாஸ்து மஹ்யம் வரத ப்ரஸன்ன

ஆயுள்காரகனாகிய சனி பகவானை போற்றும் ஸ்லோகம் இது. சனி பகவானுக்குரிய இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 8 முறை துதித்து வழிபடுவது நன்மை பயக்கும். சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் சனி பகவானுக்கு கருப்பு எள் கலந்த தீபம் ஏற்றி, மேற்கூறிய ஸ்லோகத்தை 108 முறை துதித்து சனி பகவானை வணங்குவதால் சனிகிரக தோஷங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக உங்களை துன்புறுத்தும் நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் பாக்கியம் உண்டாகும். விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும்.

sani bagavaan temple

வானியல் ஆய்வாளர்கள் இந்த சனிக்கிரகம் பூமிக்கு மிகவும் தொலைவிலிருக்கும் அதே நேரத்தில் மெதுவான சுழற்சி கொண்ட ஒரு கிரகம் என்று வரையறுத்து இருக்கிறார்கள். இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நம் நாட்டு வானியல் நிபுணர்கள் மெதுவாக இயக்குபவன் என்று பொருள் படும் “மந்தன்: என்ற பெயரை சனிபகவானுக்கு சூட்டினார்கள். அத்தகைய சக்தி வாய்ந்த சனி பகவானை அவருக்குரிய ஸ்லோகத்தை துதித்து வழிபடுவதன் மூலம் நாம் நன்மைகளை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:
செல்வம் பெருக, எதிரிகள் ஒழிய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sani slokam in Tamil. It is also Sani bhagavan manthiram in Tamil or Saneeswaran manthiram in Tamil or Sani bhagavan thuthi in Tamil or Sani bhagavan in Tamil.