உங்களின் செல்வ நிலை உயர, எதிரிகள் ஒழிய மந்திரம் இதோ

mariamman-compressed

அனைத்தின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டு ஞானிகள் நமக்கு அளிக்கும் உபதேசமாக இருக்கிறது. நாம் பிறரிடம் அன்பு செலுத்தினாலும் நம்மீது பெரும்பாலானவர்களின் அன்பை விட பொறாமை, வயிற்றெரிச்சல் போன்றவையே ஏற்படுகின்றன. அதில் சிலர் நமக்கு துன்பம் விளைவிக்க தீய மாந்திரீக வழிகளையும் நாடுகின்றனர்.இத்தகைய பிரச்சனைகளை தீர்க்கும் மாரியம்மன் தேவியின் மாரியம்மன் துதி இதோ.

Mariamman

மாரியம்மன் துதி

ஓம் தத்துவ வித்தே, முழு நிலவே
பருவ மழையே, பூக்குழிப் பெருநெருப்பே
சித்த வித்தே, மகேஸ்வரியே
அரக்கரழித்த மாரியே, மாத முப்பொழிவே
தித்திக்கும் அமுதத் தேமொழியே

சீறிய நாகமணி மகுடச் செல்வியே
பக்தர் படையல்,ஒன்பது வகை நீர்க்குடம்
தீச்சட்டி, காவடி எற்றருளுக தாயே, அம்மையே
அன்னையே, ஆத்தாளே, அருளளித்திடுக

Amman

சர்வ சக்தியாக இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் தேவியை போற்றும் துதி இது. இந்த தமிழ் துதியை தினமும் காலையில் 3 முறை துதிப்பது நன்மையான பலன்களை தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி மாத அம்மன் வழிபாட்டின் போதும், அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி இத்துதியை 27 முறை துதித்து வந்தால் உங்களின் நேர்முக, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள், செய்வினை ஏவல், துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கி தனவரவு, செல்வ சேமிப்பு உயரும்.

- Advertisement -

kaliamman

உலகம் இயங்க சக்தி தேவை. அந்த சக்தி பெண்ணின் வடிவமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்பட்டு வணங்க படுகிறது. பெண் சக்தியே உலகில் உயிர்களை தோன்ற செய்வதோடு, அண்ட சராசரங்களையும் இயங்க செய்கிறது. அந்த சக்தியை அம்மன் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். உண்மையான பக்தர்களுக்கு நன்மைகளையும், தீய எண்ணங்கள் மற்றும் செயல்களை அழிக்கும் பராசக்தியாக இருக்கிறார் அம்மன். இந்த மாரியம்மன் துதி படித்து மாரியம்மனை வணங்குவதால் பல நன்மைகளை நாம் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
பண முடக்கம் நீக்கும் சுலோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mariamman thuthi in Tamil. It is also called as Mariamman mantra Tamil lyrics or Mariamman manthiram in Tamil or Amman mantras in Tamil or Mariamman slokam in Tamil.