சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்

- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கு இடம் பெயர்வார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த ராசியில் இருந்து பிறகு அடுத்த ராசிக்கு மாறுவார்கள். இப்படி மாறக்கூடிய கிரகங்களால் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளும் உண்டாகும். இதில் பெரிதும் பாதிப்பை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடியது சனி பகவான்.

சனி பகவானின் பெயர்ச்சி ஏற்பட்டால் அதனால் பல ராசிகளுக்கு தீமைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர் நீதி பகவானாக திகழ்கிறார். நாம் செய்யக்கூடிய கர்மவினைகளுக்கு ஏற்றவாறு நமக்கு கஷ்டங்களை தரக்கூடியவர் என்பதால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சனி தோஷம் ஏற்பட்டு அதனால் பல பாதிப்புகளுக்கு உள்ளார்கள். அப்படிப்பட்ட சனிதோஷத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்றாலோ அல்லது சனி தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் வீரியம் குறைய வேண்டும் என்றாலோ என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்

சனிபகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடியது சனிக்கிழமை. சனிக்கிழமை அன்று சில வழிமுறைகளை நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது இதுவரை நமக்கு சனி தோஷம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது பிற்காலத்தில் சனி தோஷம் ஏற்பட்டாலும் இந்த வழிமுறைகளால் நமக்கு நன்மைகள் உண்டாகும். அந்த வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். அன்றாடம் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகளாக தான் இவை திகழ்கின்றன.

முதலில் சனிக்கிழமை அன்று இயன்றவர்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். எங்கள் உடல்நிலை சரியில்லை எங்களால் அப்படி இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் காலையில் உணவு அருந்துவதற்கு முன்பாக வீட்டில் அன்றைய தினம் சமைத்த உணவை எச்சில் படுவதற்கு முன்பாக காகத்திற்கு தானமாக வைக்க வேண்டும். காகம் என்பது சனி பகவானின் வாகனம் என்பதால் காகத்திற்கு தினமும் கூட நாம் உணவு வைக்கலாம்.

- Advertisement -

அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு கருப்பு எள்ளை வறுத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் தூள் இவற்றை சேர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகே இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும். நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்று வழிபடுவது நல்லது.

அவருக்கு அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் தானமாக தரலாம். அங்கு கோவிலுக்கு தேங்காயை தானமாக தரலாம். மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் சனிக்கிழமை அன்று நம்மால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய தானமும் தர்மமும் நமக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடியதாக திகழ்கிறது. இவை அனைத்துமே சனி பகவான் கவனத்தில் கொண்டு நமக்கு அவருடைய திசை நடக்கும் பொழுது நன்மைகளை தருவார் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர அஷ்டலட்சுமி தீபம்

இந்த வழிமுறைகளை முழுமையாக பின்பற்றினாலும் அல்லது இவற்றில் எது முடியுமோ அதை பின்பற்றினால் கூட நம்மை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் சனி பகவானாக இருந்தாலும் அவரின் கோபம் தணிந்து நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு யோகம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -