- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனிவார தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

சனிவார தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்

- Advertisement -

கடனை அடைப்பதற்கு தேவை என்ன? என்ற கேள்வியை எழுப்பினால் எல்லோரும் பணம் என்று தான் பதில் சொல்லுவோம். ஆனால் கடனை அடைப்பதற்கு முதலில் பணம் தேவையில்லை. பணம் சம்பாதிக்க தைரியம் தேவை. கடன்காரர்களை எதிர்கொள்ள தைரியம் தேவை. எந்த தைரியத்தோடு கைநீட்டி கடன் வாங்கினீர்களோ, அதே தைரியத்தோடு அந்த கடனை திருப்பி அடிக்க பணத்தை சம்பாதிக்க வேண்டும்.

ஆனால் நம்மில் பல பேருக்கு கை நீட்டி கடன் வாங்கும் போது இருக்கக்கூடிய தைரியம், அதை திருப்பி அடைப்பதில் இல்லை. கடன்காரர்கள் வந்து கேட்டால் ஓடி ஒளிவதை தான் நாம் பார்க்கின்றோமே தவிர, கடன்காரருக்கு பதில் சொல்லி, கடனை எப்படி அடைப்பது, என்பதை யோசிக்கவே மறந்துவிடுகின்றோம்.  உங்களுக்கு கடனை திருப்பி அடைக்கு மனதைரியம் வரவேண்டும் என்றால், முதலில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு வராகி வழிபாடு. வாராஹியை கும்பிட்டால் மன தைரியம் தானாக வரும் இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

- Advertisement -

இன்று தேய்பிறை பஞ்சமி திதி. உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்றால் உங்களுக்கான மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள முதலில் வாராகியை வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் பணத்தை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வியாபாரம் செய்வது, வேலைக்கு செல்வது, எந்த வகையில் பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியுமோ அந்த வகையில் பணத்தை சம்பாதிக்க வாராகி தாய் ஆசீர்வாதத்தை பெற வேண்டும். சரி அது என்ன இன்று இரவு 8 டு 9 க்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்.

சனி வார தேய்பிறை பஞ்சமி திதி வாராஹி வழிபாடு

இரவு 8 டு 9 சனி ஹோரை. நமக்கு கடன் துன்பம் வருவதற்கும் சனி பகவான் தான் காரணம். தொழிலில் லாபம் பெறுவதற்கும் சனி பகவான் தான் காரணம். வேலையில் வருமானம் பெறுவதற்கும், பெருகுவதற்கும் சனிபகவான் தான் காரணம். ஆக சனி ஓரையில் வாராகியை கும்பிட்டால் எல்லாம் ஒரு சேர கிடைத்துவிடப் போகிறது.

- Advertisement -

அவ்வளவுதான் இன்னொரு முக்கியமான விஷயம் வாராஹியை இரவு நேரத்தில் கும்பிட்டால் தான் இரட்டிப்பு பலன். இன்று இரவு, உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரே ஒரு ஏலக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் இறை சக்தியையும் நல்ல விஷயங்களையும் வசியம் செய்யக்கூடிய ஒரு பொருள்.

வாராஹி சக்தி மந்திரம்

ஏலக்காயில் உள்ளங்கைகளில்  வைத்துக்கொண்டு “ஓம் வம் வாராஹி தாயே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டு கையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கி தண்ணீர் குடித்து விடுங்கள். இவ்வளவுதான் பரிகாரம். நீங்கள் சொன்ன இந்த மந்திரத்தை ஏலக்காய் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். அந்த ஏலக்காயை நீங்கள் சாப்பிடும் போது நிச்சயமாக உங்களுக்கு மன தைரியம் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: 18-05-2025 திருவோண நட்சத்திர வழிபாடு

அந்த வாராகி தாய் உங்களுக்குள் இறங்கி விடுவாள். பண பிரச்சினையிலிருந்து வெளிவர தேவையான முயற்சிகளை எதிர் கொள்ளும் திறமையும் உங்களுக்குள் வந்துவிடும். மிக மிக எளிமையான பரிகாரம்தான். இந்த ஒரு ஏலக்காய் இன்று உங்கள் தலையெழுத்தை மாற்றும் என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் சமர்ப்பணம்.

சற்று முன்