வாழ்க்கையில், கோழையாக பல வருடங்கள் வாழ்வதைவிட தைரியசாலியாக ஒரே நாள் வாழ்ந்து விட்டு மடிவது மேல். குட்ட குட்ட எந்த இடத்திலும் குனிந்து கொண்டே இருக்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் வாழ்க்கையில் எதிர்த்து போராடக் கூடிய தைரியமும் நமக்கு இருக்க வேண்டும். மன தைரியம் இல்லாமல் எல்லா விஷயத்திற்கும் கஷ்டப்பட்டு கொண்டு, அழுது கொண்டு, ஒரு மூலையில் முடங்கி இருப்பவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு ஒரு தைரியத்தை கொடுக்கப் போகிறது.
ஆமாங்க, சனிக்கிழமை அனுமனை நினைத்து காலையில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். ஹனுமன் பலத்தில் பாதி உங்களுக்குள் வந்துவிடும். எந்த பிரச்சனையை எப்படி கையாண்டால் அதற்கான தீர்வு கிடைக்கும் என்று சிந்திக்க கூடிய பக்குவமும் உங்களுக்கு கிடைத்துவிடும். ஹனுமன் பலசாலி மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. பலமும் புத்தியும் சேர்ந்து செயல்பட்டால் தான் ஒரு மனிதனால் வெற்றி காண முடியும். பலமும் புத்தியும் சேர்ந்து உங்களுக்கும் கிடைக்க வேண்டுமா? வாழ்க்கையே போராடி வாழக்கூடிய தைரியம் பிறக்க வேண்டுமா. இதோ இந்த மந்திரத்தை விடாமல் கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது, ஹனுமான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். ராமபிரான் போரில் வெற்றி அடைவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவர் இந்த ஹனுமன் தான். நம்முடைய வாழ்க்கையில் வெற்றி அடைய உதவி புரிய மாட்டாரா. ராமா ராமா ராமா ராமா என்று சொல்லிக் கொண்டே இந்த பதிவை படிக்க துவங்கலாம்.
நாளை சனிக்கிழமை. எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, முடிந்தால் பூஜை அறையில் ஒரு விளக்கு ஒரு ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு, அனுமன் படத்திற்கு முன்பு அல்லது பெருமாள் படத்திற்கு முன்பு, இந்த மந்திரத்தை சொல்லலாம் 27 முறை, 58 முறை, 108 முறை எத்தனை முறை மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. ஆனால் சனிக்கிழமை அன்று வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை சொல்லும்போது மிகப்பெரிய சக்தி உங்களுக்குள் வரும். அதை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க முடியாது. நாளை இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
சனிக்கிழமை ஹனுமன் மந்திரம்
அஞ்சனை மைந்தன் ராமனின் பக்தன் ஆஞ்சநேயா போற்றி போற்றி !
இவ்வளவுதாங்க. இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிவிட்டு உங்களுடைய நாளை துவங்கிப் பாருங்கள். அந்த நாள் ஜாம் ஜாம்னு ஓஹோன்னு இருக்கும். எந்த விஷயத்திற்கும் நீங்கள் மனம் தளர மாட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கையில் காரிய தடை வராது. உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது. அதற்காக அனுமன் பலத்தை வாங்கிக் கொண்டு அடுத்தவர்களை அடக்கி ஆள வேண்டும் என்றும் நினைக்க கூடாது.
நியாயமான விஷயத்திற்கு மட்டும்தான் நாம் நம்முடைய பலத்தை பயன்படுத்த வேண்டும். நம்முடைய தகுதிக்கு குறைவாக இருப்பவர்கள், நம்மை விட கீழ் நிலைமையில் இருப்பவர்களிடம் நம்முடைய பலத்தை காட்டக்கூடாது. எப்போதுமே நம்முடைய பலம், நமக்கு மேலே பலசாலியாக இருப்பவர்களிடம் மட்டுமே வெளிப்பட வேண்டும் என்பதும் ஒரு வரையறை இருக்கிறது. சில கட்டுப்பாடுகளை நாம் என்றுமே மீறக் கூடாது அல்லவா அதற்காகத்தான்.
சனிக்கிழமை இந்த மந்திரத்தை சொல்லலாம். வியாழக்கிழமை இந்த மந்திரத்தை சொல்லலாம். ஹனுமன் சன்னிதானத்திற்கு முன்பு அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். ஏதோ ஒரு இடத்தில் நிலமை சரி இல்லாமல் சிக்கிக் கொண்டீர்கள், பிரச்சனைகள் இருந்து விடுபட வேண்டும், மனது முழுக்க பயமும் பதட்டமும் அதிகமாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் ஹனுமனை மனதில் நிறத்தை இந்த மந்திரத்தை சொல்லலாம். கூப்பிட்ட குரலுக்கு உடனடியாக ஓடி வந்து உதவி செய்யக்கூடியவர் ஹனுமன்.
இதையும் படிக்கலாமே: இழந்ததை மீட்டு தரும் சனிக்கிழமை விளக்கு
கடவுளிடம் வேண்டுதல் வைத்தால் கூட சில நொடி தாமதமாகலாம். ஆனால் ராம பக்தன் அனுமன் அப்படி கிடையாது. கூப்பிட்ட உடனே ஓடி வந்து உங்களுக்கு உதவி செய்வார். அதை நீங்கள் அனுமன் வழிபாடு செய்யத்தான் உணர முடியும். இந்த மந்திரத்தை எத்தனை முறை உச்சரித்துக் கொண்டே இருக்கிறீர்களோ, ஆயிரம் முறை உச்சரிக்கும் போது ஒரு பவர் உங்களுக்கு வரும். லட்சம் வரை உச்சரிக்கும் போது ஒரு பவர் உங்களுக்கு கிடைக்கும். மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க உங்களால் அந்த உணர்வினை நிச்சயம் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு சமர்ப்பணம்.