தினேஷ் கார்த்திக் இறுதி ஓவரில் அந்த ஒரு ரன் ஓடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அவர் செய்த சிறிய தவறு தோல்வியை தந்தது – சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்

Sanjay

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Dinesh

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தினேஷ் கார்த்திக் குறித்து ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த ட்வீட் :

அந்த டிவீட்டில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் ஓடாததது குறித்து பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் அவர் அடித்த மற்ற ரன்களை பற்றி உங்களுக்கு தெரியவில்லை இந்த ஒரு ரன் தான் தெரிகிறதா என்று ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

என்னங்க இந்த ரெண்டுபேரும் இப்படி ஆடுறாங்க. வருங்காலத்தில் இருவரும் எங்கயோ போகப்போறாங்க இந்திய அணி வீரர்களை புகழ்ந்த – ஆட்டநாயகன் முன்ரோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்