நாளை இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் மிக அற்புத பலன்களை பெறலாம்

sankarankoil

ஹரி என்பதற்கு துன்பங்களை போக்குபவன் என்று பொருள். இது காக்கும் கடவுளான பெருமாளின் ஒரு பெயராகும். ஹரன் என்பது நம் கர்ம வினைகள் அனைத்தையும் அழிக்க வல்ல சிவபெருமானை குறிக்கும் ஒரு பெயராகும். சில யோகிகளின் கருத்துப்படி சிவனும், திருமாலும் சக்தி மற்றும் சிவ தத்துவங்கள் மற்றொரு வடிவம் என கூறுகின்றனர். அரியும், சிவனும் ஒன்று என்கிற உன்னதமான இறை தத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவே, ஆடித் தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை விளக்கும் வகையில் சங்கரன்கோயில் தலத்தில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் பார்வதி தேவியாகிய கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி, தனது உடலின் ஒரு பாதியை சங்கரராகவும் மறுபகுதியை நாராயணராகவும் மாற்றி சங்கரநாராயணர் கோலத்தில் தரிசனம் தந்து அருள்புரிந்தார். இந்த அற்புதமான நிகழ்ச்சியே ஒவ்வொரு வருடமும் ஆடித் தபசு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

sankarankovil

ஆடி தபசு விழாவுக்கான கொடியேற்றம் ஆடி பௌர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன்பாக சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய நாளின் காலை வேளையில் சுப முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் விழாவை குறிக்கும் கோயில் கொடியேற்றம் நடைப்பெறுகிறது. ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு மட்டுமே உரித்தான தனிப்பெரும் திருவிழா இந்த ஆடி தபசு என்பதால் அம்பாளின் சந்நிதியின் முன்பாக கொடியேற்றம் செய் யபடுகிறது . கொடியேற்றும் வேளையிலேயே ஸ்ரீ அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு காலையில் ஒரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்புரிவார். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டடத்தில் இருந்து ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வந்து அருள்புரிவாள். அம்பாளுக்கான விழ ஆகையால் 9ஆம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது . 11ம் நாள் காலையில் யாக சாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள் , ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி , ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்ட்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடைபெறும்.

sankarankovil

இதன் பிறகு ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள் . ஆடி பௌர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையின் போது சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக , தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். இதன் பிறகு இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக அருள்பாலிக்கிறார் . இது சங்கரன்கோயில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான மிக முக்கியமான விழா ஆகும். இந்த வைபவம் தான் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும்.

- Advertisement -

sankarankovil

வாழ்விற்குத் தேவையான வளங்களை வழங்கும் திருமாலையும், கர்மவினைகளை அறுத்து, மரணபயம் உட்பட அனைத்து மனம் சார்ந்த துன்பங்களைப் போக்கி, வீடு பேற்றை அளிக்கவல்ல சிவபெருமானின் வெவ்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடும் நிலை இருக்கிறது. ஆனால் சங்கரன் கோவிலில் அருள்புரியும் சங்கரநாராயணர் சிவன் மற்றும் பெருமாளின் அம்சம் கொண்டவர் என்பதால் ஆடி ஆடித்தபசு காலத்தில் சங்கரநாராயணரை வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் எத்தகைய குறைகளும், சங்கடப்படும் ஏற்படாது. திருமணம் கால தாமதமாகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தை பாக்கியமின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் ஆடித்தபசு விழாக்காலத்தில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணரை வழிபடுவதால் நிச்சயம் தீரும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் வெள்ளெருக்கு செடி வளர்க்கலாமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sankarankovil adi thabasu in Tamil. It is also called as Sankaranarayanar in Tamil or Sankarankovil kovil in Tamil or Perumal valipadu in Tamil or Aadi thabasu in Tamil.