- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வசியம் ஏற்பட சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

பண வசியம் ஏற்பட சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

- Advertisement -

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்புக்குரிய நாளாகவே திகழ்கிறது. அப்படி சிறப்புக்குரிய நாட்களில் ஒன்றாக திகழக்கூடியது தான் நாளைய தினம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி. சதுர்த்தி என்றாலே அது விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் மாதத்தில் இரண்டு திதிகள் வரும். அந்த திதிகளில் தேய்பிறையில் வரக்கூடிய திதியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அன்றைய தினம் விநாயகப் பெருமானை நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி நாளன்று எந்த முறையில் பரிகாரம் செய்தால் பணவசியம் ஏற்படும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

ஆடி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி ஆனது புதன்கிழமை மதியம் 11 மணிக்கு மேல் ஆரம்பித்து வியாழக்கிழமை காலையில் நிறைவடைக்கிறது. பொதுவாக சங்கடஹர சதுர்த்தி நாளன்று மாலை நேரத்தில் அந்த திதி இருக்கும் பொழுது தான் விநாயக பெருமானை வழிபட வேண்டும் என்பதால் சங்கடஹர சதுர்த்தியானது புதன்கிழமை அன்று மாலை நேரத்தில் வழிபட வேண்டும்.

- Advertisement -

வீட்டில் வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் புதன்கிழமை மாலை நேரத்தில் தங்களால் இயன்ற அபிஷேக ஆராதனைகளை செய்து விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். மேலும் நாளைய தினம் புதன்கிழமை என்பதால் புதன் பகவானுக்கும், பெருமாளுக்கும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அதனால் விநாயகர் பெருமானுக்கு பச்சை பயிரை சுண்டலாக செய்து வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் பல அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரமானது நம்முடைய பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கவும், பண வசியத்தை ஏற்படுத்தவும், கடன் பிரச்சினை தீரவும் உதவும். இந்த பரிகாரத்திற்கு விநாயகப் பெருமானுக்கு உகந்த பொருளாக கருதப்படக்கூடிய அருகம்புல் வேண்டும். பத்து அருகம்புல்லை எடுத்துக் கொள்ளுங்கள், அடுத்ததாக பண வசியத்தை ஏற்படுத்தக்கூடிய வசம்பை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய துண்டாக இருந்தாலும் பரவாயில்லை. மூன்றாவதாக நமக்கு தேவைப்படுவது சுக்ர அம்சம் பொருந்திய வெள்ளை நிற நூல்.

- Advertisement -

இப்பொழுது இந்த வசம்பை வைத்து அதனுடன் 10 அருகம்புல்லையும் சேர்த்து வைத்து வெள்ளை நிற நூலால் நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய இடது கையில் இந்த அருகம்புல் வசம்பை வைத்துவிட்டு வலது கையால் அதை மூடிக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்கள் தீருவதற்குரிய நேர்மறையான வார்த்தைகளை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

அதாவது கடன் தீர வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று கூறி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்து விநாயகர் பெருமானுக்குரிய அகவல் அல்லது 108 போற்றிகளை மனதார கூற வேண்டும். பிறகு இந்த அருகம்புல் வசம்பை எடுத்து விநாயகரின் பாதத்தில் வைத்து விட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு விநாயகரின் பாதத்தில் இருக்கக்கூடிய அந்த அருகம்புல் மற்றும் வசம்பு கட்டை எடுத்து தங்களுடைய பர்ஸ், ஹேண் பேக் போன்றவற்றில் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நோய்கள் தீர ராமர் வழிபாடு

இப்படி செய்வதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளாலும் பெருமாளின் அருளாலும் பண வசியம் என்பது ஏற்படும். அதனால் பண வரவு அதிகரிக்கும். கடன் சுமை குறையும். அனைத்து விதமான நன்மைகளையும் சந்தோஷங்களையும் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்